பக்கம்:நித்தியமல்லி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80


வயகப் பெண்ணும் அதே வயசு வாலிபனும் கொட்டும் மழையில் ஒரு குடையில் கீழ் தெருக்களிலே நடந்து செல்ல அந்த நாளில் முடியுமா, என்ன? குடைக் காதல் வள ர் ந் த து கம்பீரமாக அபிரகதீஸ்வரர் கோயில் ராஜகோபுரம் போன்றே கம்பீர் மாக வளர்ந்தது. காதலுக்கு ஒரு முடிவுகாண இரு மனங்களும் துடித்தன. "நாம் இருவரும் ஒரே அந்தஸ்து -மட்டத்தில் இருப்பவர்கள். ஆகவே, சினிமாக்களில் வருவது மாதிரி, நமக்குள் எவ்விதச் சலனமும் உண்டாக வழியில்லே உனக்கு நான்; எனக்கு நீ. இது சத்தியம்! சத்தியமானவாக்கு இது!.. இந்தத் தெய்வ முடிவுக்கு ஆரம்பம் செய்யத்தான் பகவான் அன்றைக்கு மழையைத் தருவித்திருக்கிருன் வருண பகவானை தூதுவாராக!உன்னைப் பரிசம் போடும்போது பரிசப் பரிசாக என் அம்மாவின் நெக்லஸை உனக்கு நான் கொடுப்பேனுக்கும் அந்த அட்டிகை என் தாய்வீட்டுச் சீதனம்!. ஒரு நல்ல நாள் பார்த்து இவ்விஷயத்தை-அதாவது, நம் மன மொத்தி காதல் திருமணத்தை தமது இருதரப்புப் பெற்றேர்களின் முன்னிலையிலே வைத்துவிடுவோம்!" என்று முன்மொழிந்தான் அவன். அவள் வழி மொழிந் திாள். ஆளுல், அப்பொழுதுதான் விதியின் விளையாட்டு வேறு திசைக்குக் குறி வைத்திருந்தது. - - திருஞானசம்மந்தருக்கு பார்வதிதேவி திருமுலைப் பால் வழங்கிய நிகழ்ச்சியை விழா எடுத்துத் கொண்டா டிய வைபவத்தை நேரில் கண்டு தரிசித்து வர சீர் .காழிக்குச் சென்றிருந்தனர் மரகதத்தின் குடும்பத்தினர். மரகதமும் உடன் சென்று திரும்பினுள். திரும்பியதும் அவளுக்கு ஒரு பயங்கர சேதி காதில் விழுந்தது. பட் கடணத்தில் படம் எடுக்கும் பெரும்பணக்காரர் ஒருவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/81&oldid=1277345" இலிருந்து மீள்விக்கப்பட்டது