இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
8 கித்திலக் கட்டுரைகள் மதுரைத் தமிழ் நாகனுரின் கருத்தாகும் " என்ருர். அப்போது அங்கிருந்தவர்கள் அந்தப் பாடலின் கருத்து அவ்விதம்தான் இருத்தல் வேண்டும் என்று ஒரு முகமாக முடிவுக்கு வந்தனர். இவ்விதம் சொல்லிக் கொண்டிருக்கும் பொது டாங்கு டாங்கு என்று பாடசாலை மணி அடித்ததால் அந்தக் கூட்டம், அவ்வளவோடு முடிந்தது. அங்கே யிருந்த மாணவர்களும் பிற ஆசிரியர்களும் குறளில் இல்லாப் பொருளும் உலகில் இல்லை. இந்த ஆசிரிய ருக்குத் தெரியாத பாடலும் தமிழில் இருக்க முடியாது ' என்று கூறிக் கொண்டே சென்றனர். t