பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கித்திலக் கட்டுரைகள் நாட்டினின்று கொணர்ந்த வெண்கல், தென்றிசைச் சந்தனக் கட்டையுடன் பயனின்றிக் கிடந்தது. ' குளிரின் மிகுதியால் மகளிர் தம் கூந்தலினை மாலையிட்டு முடியாமல் மங்கலமாகச் சில மலரிட்டு முடிக்க விரும்பிச் சந்தன விறகிலே நெருப்பை உண்டாக்கி, அதிலே அகிற்கட்டையினையும், கண்ட சருக்கரையும் கூட்டிப் புகைத்தனர். ' பல வேலைப்பாடுகளுடன் விளங்கிய சிவந்த ஆலவட்டம், உறையிடப் பெற்றுச் சிலந்தி வலை சூழ, வளைந்த மரச் சட்டத்திலே தொங்கிக் கொண்டிருந்தது. பெரிய மாளிகையில் தென்றலின் பொருட்டுத் தென் புறமாக அமைக்கப் பட்டிருந்த கதவுகள் அழுத்தமாகத் தாளிடப்பட்டுக் கிடந்தன. வாடையின் கொடுமையால், மக்கள் குவிந்த வாயினையுடைய குடத்திலிருந்த தண் னிரைப் பருகாதவர்களாய் அகன்ற வாயினையுடைய கலயங்களில் இட்ட நெருப்பின் வெம்மையினை விரும் பினர்கள்.' மாணவர்களே, இப்புலவர் பெருமாளுர் குளி காலத்தின் இயல்பினைப் புனைந்துரை சிறிதும் இன்றி. அழகு பெற விளக்கிக் கூறியிருத்தலைக் கூர்ந்து நோக்கி இன்புறுங்கள். சிறந்த ஓவியப் புலவனுலும் சித்திரித்துக் காட்ட இயலாத சின்னஞ்சிறு நிகழ்ச்சி களையும் இப்புலவர் தம் நுண்ணுணர்வால், கற்போர் உள்ளம் கவருமாறு எடுத்துரைக்குந் தன்மை பெரிதும் பாராட்டற் பாலது. பண்டைத் தமிழ் நூல்களில் இத்தகைய வருணனைகள் மலிந்திருத்தலை நாம் கான லாகும.