பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்கால வாழ்க்கையும் தற்கால வாழ்க்கையும் 48. பிடிக்கப்பட்டுள்ள விஞ்ஞானப் புதுமைகள் எல்லாம் மக்கள் வாழ்க்கையை வளப்படுத்த உதவவில்லை : போர் வெறியைத் தூண்டி நாசம் விளைவிக்கவே உதவு கின்றன என்று கூறினர். இஃது ஒர் அளவுதான் உண்மை. துப்பாக்கியும், பீரங்கியும், அணுகுண்டும் போருக்கு உதவுகின்றன என்பது உண்மையே. இதனு லேயே இக்கால வாழ்க்கை பயனற்றது என்று கூறி விடலாமா ? இவர்கள் போற்றிப் புகழ்ந்த சங்க காலத் தில் போர்கள் நடைபெறவில்லையா ? சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள் ஒற்றுமை இன்றிப் போர் புரிந்த செய்தியை விளக்கப் புறநானூறு ஒன்று போதுமே. அக்கால அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப அவர்கள் கண்டு பிடித்திருந்த வில்லும் அம்பும் வேலும், வாளும் ஆயுதங் களாகப் பயன்பட்டன. பகைவர் நாட்டைக் கைப் பற்றி இடித்துத் தரைமட்டமாக்கி, நெருப்பூட்டி அழித்து நாசம் செய்த கதை அக்காலத்தும் நிகழ்ந்தே உள்ளது. அதே நிலைதான் இன்றும் உள்ளது. இக் கால அறிவு வளர்ச்சியினுல் கண்டு பிடிக்கப்பட்ட வியத்தகு ஆயுதங்கள் போரில் பயன் படுத்தப்படு: கின்றன. அஃது எங்ங்னம் தவருகும் ? இதல்ை நான் போரை ஆதரிப்பதாகக் கருதி விடாதீர்கள். அஃது எந்தக் காலத்திலும் இயற்கை என்பதே நான் கூறக் கருதியது. ஆல்ை நாகரிகம் மிக்க இக்காலத்தில் அத்தகைய போர் முறைகளை ஒழித்து உலகம் முழுவதும் ஒரு குடும்பமாக வாழ வழி காணத் தலைவர்கள் உழைத்து வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபை அதற்காகப் பாடுபட்டு வருவதை அனைவரும் அறிவோம். மனிதப் பண்பின் உயர்ந்த