உங்கள் கண்களுக்கெதிரே ஒரு குழந்தையின் உருவம் தோன்றுவதாக எண்ணிக் கொள்ளுங்கள். நல்ல அழகான குழந்தை அது பிறந்து இன்னும் இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குக் கண், காது, கை, கால் முதலியன யாவும் குறைவற அமைந் துள்ளன. இப்போது நாம் அதன் உள்ளத்தின் நிலை யினைப் பற்றிச் சிறிது நினைத்துப் பார்க்கலாம். உள்ளம் என்னும் ஒன்று இவ் விளம்பருவத்தில் அதற்கு உண்டா என்பதே சந்தேகம். உணர்ச்சிக் கருவிகள் அனைத்தும் நன்கு அமைந்திருந்தும் இன் னும் நன்ருகத் தொழில் படவில்லை. அதற்கு அப் போது ஸ்பரிச உணர்ச்சியே பெரும்பாலும் இருக்கும். அதுவும் தட்பம் வெப்பம் முதலியவைகளையே ஒருவாறு தெரிந்து கொள்ளும் பால் குடித்தல், கை கால்களை அசைத்தல், உறங்குதல், அழுதல் இவைகளே அக் குழந்தையின் தொழில்கள். அவைகட்குத் தக்கபடி உணர்ச்சிக் கருவிகளும், மூளையும் சிறிது வேலை செய்து இருக்கலா ம். அவை இயற்கைச் செயல்கள். உள்ளத் தால் உண்ர்ந்து அக்குழந்தை அவைகளைச் செய்த தாகக் கூறமுடியாது. கி. - 6.
பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/87
Appearance