பக்கம்:நித்திலவல்லி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

173



‘தேனூர் மயானத்தின் வன்னி மரத்தருகே, தன் மனைவிக்குப் பேய் ஓட்டுவதற்காக’ ஒரு மறவன் வந்து கூப்பிட்டான். அதுதான் நல்ல சமயமென்று அந்த மறவனுடைய வண்டியில் மறைந்து தப்பி, மயானத்துக்குப் போனேன். அன்றிரவு, மயானத்திலிருந்து நான் திரும்பவே இல்லை. ஊருக்குள்ளும் சுற்றுப்புறங்களிலும் களப்பிரர்கள் என் தலையைச் சீவி எறியக் காத்திருப்பது எனக்குப் புரிந்தது. மயானத்தில் இருந்த வன்னி மண்டபத்துப் புதரிலேயே பதுங்கியிருந்தேன். சுடுகாட்டு நரிகள் என் மேல் படை எடுத்தன. பசிச் சோர்வில் நான் சக்தியற்றிருந்தேன். நரிகளை நான் வெல்ல முடியவில்லை. அவற்றின் பசிக்கு நான் இரையாகி முடிந்து விடாமல் தப்ப முயன்றும், நான் முழு வெற்றி அடையவில்லை.

தேனூரிலிருந்து முன்னிரவில் புறப்பட்டு, வையையின் மறுகரையில் வந்து நீந்தியே இக்கரைக்கு வந்தால், இங்கே உப வனத்திலும் பூத பயங்கரப் படை இருந்தது. பேய் ஓட்டுவதற்குக் கொண்டு வந்திருந்த என் சாதனங்களைப் பயன்படுத்தி, மிகத் தந்திரமாக நடு இரவுக்கு மேல்தான் நிலவறை வழியில் நான் இறங்க முடிந்தது. நரி கடித்த காயங்களின் வலியும், கடும் பசியும் என்னை வாட்டின. ஏறக்குறைய முக்காலும் செத்து விட்டது போன்ற நிலையில்தான் நிலவறையில் நான் நடக்க முடிந்தது. இங்கே வந்த பின்பும், எனக்கிருந்த பயத்தில் இந்த மாளிகையும் களப்பிரர் வசப்பட்டிருக்குமோ என்று அஞ்சியே முதலில் மூங்கிற்கழியில் என் கை வசமிருந்த கபாலத்தைக் கோத்து நீட்டினேன். குரல் கொடுத்து நிலைமை அறியவும் அஞ்சினேன். நல்ல வேளையாக நீங்கள் என்னைக் காப்பாற்றினீர்கள். சுடுகாட்டு நரிகள் என்னைக் கிழித்துப் பாதி கொன்று விட்டன.”

“அட பாவமே! நிலைமைகள் இவ்வளவு கெட்டுப் போயிருப்பதால்தான், எங்கிருந்தும் எதுவுமே நமக்குத் தெரியவில்லை. மோகூரில் பெரியவர் எப்படி இருக்கிறாரென்று தேனூரில் ஏதாவது கேள்விப்பட்டாயா நீ?” என்று இளையநம்பி கேட்டபோது ‘இல்லை’ என்பதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/174&oldid=945322" இலிருந்து மீள்விக்கப்பட்டது