பக்கம்:நித்திலவல்லி.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

362

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


வெளியேறினார் மாவலி முத்தையர். பூத பயங்கரப் படைத் தலைவனும் சிறைக் கோட்டக் கதவுகளைப் பூட்டிக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து, அவரோடு சென்றான். அவர்கள் இனிமேல், தங்களை உயிரோடு விடுவது சந்தேகமே என்ற அளவு அழகன் பெருமாளுக்குப் புரிந்து விட்டது.

உடனே கற்களை நகர்த்தித் தளவ ரிசையை மூடினார்கள். கீழ் நோக்கி இறங்கிய படிகளும், சுவரும் அகழி நீர்ப் பரப்புக்குச் சமமான பள்ளமாயிருந்ததனால், நீர் கசிந்து வழுக்கின. இருட்டு வேறு மைக்குழம்பாயிருந்தது. படிகளைக் கடந்து கீழே பாதாளச் சிறைக்குள் வந்து விட்டோம் என்ற நிலைமையை உணர்ந்ததும், அழகன் பெருமாள், தென்னவன் மாறனை மெல்லக் கூப்பிட்டான். பதில் இல்லை. பசியினாலும், களைப்பினாலும் தென்னவன் மாறனும், அவனோடு இருக்கும் திருமோகூர் அறக் கோட்டத்து மல்லனும் சோர்ந்து தளர்ந்து, பதிலுக்குக் குரல் கொடுக்கவும் ஆற்றலற்றுப் போய் விட்டார்களோ என்று அழகன் பெருமாள் தவித்துக் கொண்டே கைகளால் துழாவிய போது, கிணற்றின் ஆழத்திலிருந்து ஒலிப்பது போல் ஒரு பெண் குரல் அங்கே ஒலித்தது.

அழகன் பெருமாளும் அவனோடு இருந்தவர்களும் திகைத்தார்கள்.

“நீங்கள் யாரைத் தேடி வந்திருக்கிறீர்களோ, அவர்கள் இருவரும் இங்கிருந்து தப்பி விட்டார்கள்! உயிர் வேண்டுமானால் நீங்களும் இங்கிருந்து உடனே தப்ப வேண்டும். அபாயம் உங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது” என்று மீண்டும் அந்தக் குரல் ஒலித்த போது, அந்தக் குரல் யாருடை யது என்பது அழகன் பெருமாளுக்கு ஞாபகம் வந்து விட்டது. அது காம மஞ்சரியின் குரல் என்பதை அவன் உணர்ந்தான்.

அவள் காலடியோசை நடந்த திசையைப் பின்பற்றி, அவர்கள் நடந்தார்கள். இருளில் மற்றொரு படிக்கட்டை அவள் அடையாளம் காட்டினாள்.

“ஐயா! இதன் வழியே சென்றால் நடுவூரில் உள்ள வசந்த மண்டபத்து நந்தவனத்தின் அருகே கொண்டு போய் விடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/361&oldid=946578" இலிருந்து மீள்விக்கப்பட்டது