பக்கம்:நித்திலவல்லி.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

394

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


புரியும் கொடுமைகளின் பிடி ஒரளவு தளரும்-தளரலாம் என்று அவன் எதிர்பார்த்தான். அந்த அளவிற்கு அது பயனளித்தது. மாவலி முத்தரையரின் கவனத்தைப் பெரியவர் இறந்து விட்டதாகச் சொல்லித் திசை திருப்பியதன் மூலம், அவரது கடுமையான சந்தேகத்தின் பிடி தளர்ந்திருப்பது மட்டும் புரிந்தது.

அவருடைய உடனடியான முதற் சந்தேகத்தைப் பிடி தளர்த்தி வேறு சந்தேகத்தில் திசை திருப்பிவிட்ட அளவு, அழகன் பெருமாளுக்கு வெற்றி கிடைத்திருந்தது. மாவலி முத்தரையர் எதையும் அறிந்து கொள்ள விடாமல் அவரது கவனம் பெரியவர் பற்றியே திரும்பச் செய்ய முடிந்த வரை அவர்கள் சாதுரியமாகவே செயல் பட்டிருந்தார்கள்.

ஒரு பிடி தளர்ந்தது. ஆனாலும் அதுவும் முழுமையாகப் பலிக்கவில்லை என்று சிறிது நேரத்தில் மாவலி முத்தரையர் பேசிய பேச்சிலிருந்து புரிந்தது. நம்பிக்கைதான் அரச காரியங்களைச் செய்பவர்களின் மூலதனமோ என்று புரிந்து கொள்ளத் தக்க விதத்தில் மறுபடி சீறத் தொடங்கினார் அவர். இன்னும் அவர் தங்களை ஆழம் பார்க்கிறார் என்பதை அழகன் பெருமாள் அதன் மூலம் அறிந்து கொண்டான்.


3. அழகன்பெருமாளின் வேதனை

ழகன் பெருமாள் மிக மிகச் சாதுரியமாக நடித்த அரச தந்திர நாடகத்தை மாவலி முத்தரையர் நம்பாததுடன் விரைந்து அவனை எதிர்த்துச் சொல்லால் மடக்கினார். குறுக்குக் கேள்விகள் கேட்டு அவனைத் திகைக்கச் செய்தார்.

“தம்பி! என் வயதை நோக்க நீ மிகவும் இளைஞன்தான். உன்னைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/392&oldid=946609" இலிருந்து மீள்விக்கப்பட்டது