பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சிதறல்கள் 495 (5) திருச்சியில் படிக்கும்போது தேசியக் கல்லூரி தத்துவப் பேராசிரியர் சீநிவாசசர்மா என்பவரைக் கேள்விப் பட்ட துண்டு, மிகுபுகழ் பெற்ற பேராசிரியர் இவர் வகுப்பில் நிகழ்த்தும் சொற்பொழிவுகள் கேட்டார்ப் பிணிக்கும் தகையலாய், கேளாரும் வேட்ப மொழிவ தாய்** இருக்கும் என்று கேள்விப்பட்டதுண்டு. ஒருநாள் புதன்கிழமையன்று (எங்கள் கல்லூரி விடுமுறை) இவர் சொற்பொழிவைக் கேட்க வேண்டும் என்று தேசியக் கல்லூரியில் வட்டம் போட்டேன்; இவர் எடுக்கும் வகுப்பை அறிந்து கொண்டு தாழ்வாரத்தில் உலவினேன். ஓரைம்யது மாணாக்கர்கள் முன் னி 1லயில் உரை நிகழ்த்துவது போன்ற பெரிய குரலைக் கேட்டேன்; தாழ் வாரத்திலிருந்து கொண்டே நயாகரா அருளி பொழிவது போன்ற 'பேருரையை' அநுபவித்து மகிழ்ந்தேன். வகுப்பைப் பார்வையிடலாம் என்று தாழ்வாரத்தில் நடந்து சென்றபோது ஒரே ஒரு மாணவி மட்டிலும் வகுப்பறையில் அமர்ந்திருப்பதைக் கண்டு வியந்தேன். வானொலி, தொலைக்காட்சியில் பேருரை நிகழ்த்துவது போல் உரை நிகழ்த்தும் பேராசிரியரையும் 'கடைக்கண் நோக்கால்' கண்டேன்; மகிழ்ந்தேன். இந்த மாணவியும் புனித சிலுவைக் கல்லூரியைச் சார்ந்த ஒரு துறவிப் பெண் (Nun). பேராசிரியர் சொற்பொழிவை அநுபவித்து மகிழ வேண்டுமென்றே 'விதிவிலக்கு பெற்று மாணவியாகச் சேர்ந்தார் என்று பின்னர்க் கேள்வியுற்றேன். அக்காலத்தில் பட்டப் படிப்பில் 'தத்துவமும்' விருப்பப் பாடமாக இருந்தது . ஆனால் மாணவர்கள் இதை விரும்பிப் படிப்பதில்லை , பேராசிரியர் சர்மா அவர்கள் ஆண்டார் தெரு எண்-2 கொண்ட இல்லத்தில் வாழ்ந்து வந்தார்கள். நான் 2. குறள்-943