பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 நினைவுக் குமிழிகள்-2

வாகத் தெரிந்தது. இந்த நிலைமையைச் சுப்பிரமணியமும் ஒருவாறு புரிந்து கொண்டிருக்க முடியும் என்பது என் ஊகம். -

நான் பி. எஸ்.சி., பயின்றபோதும் (1937-39) ஒரு விருப்ப ஆவணம் (will) தயாராயிற்று, பல மாதங்கள் வக்கீலுடன் கலந்து விருப்ப ஆவணத்தின் நகல் தயாராகியது; நல்ல தாளில் 50 படிகள் அச்சிடப் பெற்றது. நல்லெண்ணத்துடன் தான் அந்த விருப்ப ஆவணம் தயாரானது. இந்தச் சொத்து பாட்டிக்குப் பிறகு தம் தாய்க்கு வரும் என்பதை என் மைத்துனர் நன்கு அறிந்திருந்தார். பாட்டிக்குப் பிறகு தன் தாயார்தான் சொத்தை ஆள்வார் என்பது அவருக்கு நன்கு தெரியும். இதை அவர் விரும்பவில்லை. தம் அன்னையை விடப் பாட்டி பன்மடங்கு உயர்ந்தவள் என்று அடிக்கடி சொல்லி வருவதை நான் கேட்டிருக்கின்றேன். தாம் இரண் டாவது திருமணம் புரிந்து கொண்டால் முதல் மனைவி ஜீவனாம்சத்திற்கு வழக்குத் தொடர்ந்தால் என்ன செய்வது? அவளுக்கு மகன் ஒருவன் இருக்கின்றான்; அவனை மைன ராகப் (Minor) போட்டுக் கொண்டு சொத்தின் பாகப் பிரிவினைக்கு வழக்கு தொடுக்கவும் கூடுமல்லவா? இந்த முறையில் எழுந்த சிந்தனைதான் விருப்ப ஆவணம் தயாரானதற்குத் காரணம் என்பதை நான் அறிவேன்.

இந்த விருப்ப ஆவணம் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை வைத்திருந்த சிறு அச்சகத்தில்தான் அச்சிடப் பெற்றது. நானும் என் மைத்துனருடன் பலமுறை அச்சகத்திற்குப் போயிருக்கின்றேன். பார்வைப் படிவங்களை யும் (Proots) திருத்தியிருக்கின்றேன். விருப்ப ஆவணத்தின் சாராம்சம் இது : (1) இந்தச் சொத்து முழுவதும் (விவரம் விருப்ப ஆவணத் கில் தரப்பெற்றிருந்தது) தான் சுயமாகச் சம்பாதித்தது; (2) தனக்குப் பிறகு இது தன் மகளைச்