பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii

பேராசிரியர் அவர்கள் மிகுந்த நினைவாற்றல் உள்ள வர்கள் என்பதையும் இந்நூல் நமக்கு எடுத்துரைக்கின்றது. பல ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தவற்றை, எவ்விதக் குறிப் பும் எழுதி வைத்திராத நிலையில் நிரல்பட எடுத்துக் கூறி யுள்ளமை வியப்பளிப்பதாக உள்ளது. துறையூரில் தலைமை யாசிரியராகப் பணியாற்றிய போது கணக்குத் தேர்வு (Account Test) எழுத அவர் மேற்கொண்ட முயற்சிகளை யும், கணக்குத் தேர்விலான வினாக்கள் பற்றிய விவரங்களை யும் (பக். 48, 50) அறிகின்றோம். தற்போது பணியிலுள்ள வர்களில் கூட பலர் இந்த அளவுக்குக் கணக்குத் தேர்வைப் பற்றி அறிந்திருப்பார்களா என்பது ஐயத்திற்குரியதாகும். பள்ளி இலக்கிய மன்றக் கூட்டத்தில் பாவேந்தர் பாரதி தாசன் எடுத்துரைத்த கருத்துகளும் (பக். 184-187), திருப்பராய்த்துறையில் தவத்திரு. சித்பவாநந்த அடிகள் அத்வைதம், துவைதம், விசிட்டாத்வைதம் (பக். 207-208) பற்றிப் பேராசிரியருக்கு எடுத்துரைத்த விளக்கமும் படித் துணர்வதற்குரியன.

அன்புள்ளமும், செயல் திறனும் இணையும் போது பயன்மிகு விளைவுகள் ஏற்படும் என்பது நாமறிந்த உண்மை யாகும். ஏழை மாணவர் நிலைக்கு இரங்கி காலம் தாழ்ந்த நிலையில் முன் தேதியிட்டுக் கட்டணம் பெற்றமை, அரசு விதிகளின்படிக் கட்டணச் சலுகைக்குத் தகுதியற்ற ‘பரம ஏழை மாணவர்களுக்குக் கட்டணச் சலுகை ஏற்பாடு (பக். 14), துறையூரிலும் சுற்றுப்புறச் சிற்றுார்களிலும் சாதி வேற்றுமை பாராமல் செல்வர்களை நாடி கட்டணச் சலுகைத் திட்டத்திற்கென நன்கொடை திரட்டியமை, முதல், இரண்டாவதாகத் தேறிய மாணவர்களுக்குப் பரிசுத் திட்டம் ஏற்படுத்தியமை, "இளைஞர் அறிவுச் சுடர்' கையெழுத்து இதழ் தொடங்கியமை, வீட்டில் இடவசதியற்ற ஏழை மாணவர்களுக்கு இரவில் படிப்பதற்காகப் பள்ளியில் மின்விளக்கு வசதியுடன் இடவசதி ஏற்பாடு செய்தமை, (பக். 120) பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருமே தம் குழந்தைகள் எனக் கொண்டு இரவு நேரத்திலும் மாணவர் தம் ஐயங்களைப் போக்கி அவர்களை நன்கு படிக்க வைத்தமை, சாலை வசதிகளற்ற நிலையில் இடர்ப்பாடு சளுக்கிடையே தொலைவிலிருந்து வந்து பயின்ற மாணவர் களின் துயர் துடைக்க மாணவர் இல்லம் நிறுவியமை, நன்கொடை திரட்டி சமையல் பாத்திர்ங்கள் வாங்கித் தக்க பணியாளர்களைக் கொண்டு விடுதிக்கட்டணம் திங்கள்