பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்பவானந்த அடிகள் * 209

சுற்றிப் பார்த்தேன். இதன் தலைமையாசிரியர் இராம கிருஷ்ணன் என்னோடு இருந்து எல்லாவற்றையும் காண் பித்தார்.

பள்ளிக் கட்டடங்கள் படுக்கையில் அமைந்துள்ளன. சுமார் ஆறு அடி மேடையின்மீ இரும்புத் தூண்கள் நாட்டப்பெற்று அவற்றின் மீது அஸ்பெஸ்டாஸ் தகரங் களால் வேயப்பெற்றுள்ளன. மாணாக்கர் இருக்கைகள், ஆசிரியர் இருக்கை, கருப்பலகை அமைப்பு இவை முறைப்படி நன்கு அமைந்துள்ளன. இப்படித் தனித் தனியே 25 அடி துரங்களில் வகுப்பறைகள் உள்ளன. வெள்ளக்காலங்களில் வெள்ளம் வகுப்பறைக்குள் துழைந்து வெளியேறும். அப் போது ஒன்றிரண்டு வாரங்கள் பள்ளிக்கு விடுமுறை. இந்தப் படுகையில் காய்கறித் தோட்டங்கள்; மாணவர் விடுதிக்கு வேண்டியவை இங்குக் கிடைக்கும். போதாதவற்றிற்கு மட்டிலும் திருச்சியிலிருந்து தருவிக்கப்பெறும், நீச்சல்குளம் ஒன்று படுகையிலேயே அமைக்கப்பெற்றுள்ளது. மாணவர் கட்கு நீந்தத் தெரிய வேண்டும்; இதில் பயிற்சி அளிக்கப் பெறும்; நீச்சல் குளத்தைச் சுற்றியுள்ள மேடைகளில் குழாய் அமைப்புகள். சோப்பு போட்டு துணிகளை இவற்றில்தான் தோய்த்துக் கொள்ளவேண்டும், படுகையில் ஒரிடத்தில் 20,30 பேர்கட்கென்று வரிசையாக இரண்டு வரிசைகளில் கழிப் பிடங்கள்; தனித்தனியாகத் தடுப்புச்சுவர்களுடன் கூடியவை. வெளியிலிருந்து தண்ணிர் ஊற்றிவிட்டால் மலங்கள் அடித்துக் கொண்டுபோய் கழிப்பிடம் தூய்மையாய்விடும்.

உணவு விடுதி 'கைக்குத்தல் அரிசியில் உணவு தயாரிக்கப் பெறுகின்றது. இந்த அரிசி மர எந்திரததைச் சுழற்றுவதால் தயாரிக்கப் பெறும் அரிசி, இட்டிலி, தோசை இவற்றிற்குப் புழுங்கலரிசியும் இப்படியே தயாரிக்கப் பெறுகின்றது. இவற்றிற்கு மாவு அரைக்கப்பெறும் இயந்திரங்கள் உள்ளன.

நி-14