பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 . நினைவுக் குமிழிகள்-2

பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்

புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஒங்கும் கங்குகரை காணாத கடலே! எங்கும்

கண்ணாகக் காண்கின்ற கதியே! அன்பர் தங்கநிழல் பரப்பிமயல் சோடை யெல்லாம்

தணிக்கின்ற தருவே! பூந் தடமே ஞானச் செங்குமுத மலரவரும் மதியே! எல்லாம்

செய்யவல்ல கடவுளே! தேவ தேவே!"

உன்ற பாடலை இசையூட்டி மிக அற்புதமாய் பாடி எல்லோரையும் மகிழ்வித்தான். இப்படி ஒரு மாணாக்கன் இருப்பதை அன்றுதான் நானும் தமிழாசிரியரும் அறிந்தோம். அவன் பெயர் கண்ணன் என்பது; மாவட்ட நீதிமன்றத்தில் முக்கிய அலுவலராகப் பணி புரிந்து வந்த துரைராஜ் என்ற அலுவலரின் திருமகன். எல்லாம் செய்ய வல்ல கடவுளே! தேவ தேவே! என்ற அடியையும் நன்றாகத்தான் பாடினான். இதற்குள் நாணப்பட்டு தேவ தேவே! என்ற தொடரை இழுத்துப் பாடி நிறுத்தாமல் திடீரென்று ‘வசனம்' படிப்பதுபோல் படித்து நிறுத்தினான். உடனே திரு சாம்பசிவம் பிள்ளை, "ஏம்பா, சுவாமியைத் திடீரென்று கீழே போட்டுவிட்டாயே! என்று நகைச்சுவையுடன் கூறி, * அப்பாடலை அற்புதமாகப் பாடி முடித்து மாணாக்கர்கட்கு உற்சாக மூட்டினார்.

இவ்வளவு உற்சாகமுள்ள இந்த அதிகாரிக்கு உடல் நிலை சரியாக இல்லை. செரிமானக் குறைவால் மிகச் சிரமப்பட்டார். இவருக்கு மட்டிலும் பக்குவமான இட்டவி, (காலை உணவு) பால் அனுப்புவேன். மதிய உணவுக்குக் குழைவாகச் சோறு சமைத்து அவருக்கு உகப்பான காய்கறி,

4. திருவருட்பா, மூன்றாம் திருமுறை-மகாதேவ

ртерер-48, -