பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. R. கிருட்டினசாமி ரெட்டியார் 257

அப்பொழுது என்னை வரவழைத்து இவ்வூர் சினிமா கொட்டகையில் எனக்கு ஒரு சிறப்புச் செய்வீர்கள். பட்டு வேட்டி, பட்டு அங்கவஸ்திரம், பட்டுச் சட்டை வெகு மதியாக வழங்குவதுடன் ஒரு பொற்கிழியும் (பண முடிப்பு) எனக்கு அளிப்பீர்கள் இதைப் படித்த தம்புக்கு சிரிப்புதான் வந்தது. இன்னும் சில நாட்களில் வேலையும் போகப் போகின்றது. மாதம் ஊதியமாகக் கிடைத்து வந்த ரூ. 50-ம் நின்றுபோகும். 'இந்நிலையில் கம்பெனி முதலாளியா?” என்று மலைத்துப் போனார். சோதிடருக்கு காப்பி பானம் வழங்கி சிறிது வெகுமதியுடன் அனுப்பி வைத்தார்.

ஒரு சில மாதங்களில் கிருட்டினசாமி ரெட்டியார் பணியிலிருந்து கழன்று கொள்ள வேண்டிய நாளும் வந்தது: விலகிக் கொண்டார். முதலாளி சிதம்பர ரெட்டியார் தம்புக்கு ஒரு பழைய பேருந்தை அன்பளிப்பாகத் தந்து அதனைக் கொண்டு வாழ்க்கையைப் புதிய பாதையில் அமைத்துக் கொள்ளுமாறு வாழ்த்தினர். ஆனால் தம்பு அதை ஏற்றுக் கொள்ளவில்லை, அன்றைய நிலைமையில் அதன் மதிப்பு ரூ. 15:01-ஆக இருந்தது. தம்பு சொன்னார்; "நீங்கள் உதவினமைக்கு மிகவும் நன்றி, இதனால் என் எதிர் காலத்தில் நல்லூழ் நன்றாக இருந்தால் முன்னேற்றம் . அடையலாம். தீயூழ் நேரிட்டால் என் நிலைமை சீர்கெட்டு நான் அழிந்து போகவும் வாய்ப்பு ஏற்படலாம். வாழ்ந்தால் "பெரிய மனிதர் வாழ்த்திக் கொடுத்தார். அதனால்தான் தன்றாக இருக்கின்றான்' என்று மக்கள் பேச்சுக்கு இடம் ஏற்படும். தாழ்ந்தால், பாவிகிெட்ட எண்ணத்தால் தந்த தால் தம்பு இப்படிச் சீர்கெட்டு அழிந்தான் என்ற பேச்சுக்கும் இடம் ஏற்படலாம். இப்படிப் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் இடம் ஏற்படவேண்டா. ஆகவே இதன்

நி-17