பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. R. கிருட்டிணசாமி ரெட்டியார் 259

எண்ணித் துணிக கருமம்; துணித்த பின்

எண்ணுவம் என்பது இழுக்கு (467) என்பது வள்ளுவர் வாக்கன்றோ? இன்ன வகையால் செய்தால் இதை முடிக்கலாம் என்று வழியோடு செய்யாத முயற்சி வீணாகும்; பலர் துணையாக நின்று காப்பாற்றி னாலும் அந்த முயற்சி பயன் அளிக்காது. ஆகவே எல்லா வற்றையும் முன்னமே நன்றாக எண்ணிப் பார்த்து வழி யோடு முயற்சி செய்யவேண்டும். நல்ல செயலாக இருந் தாலும் ஆராய்ந்த பிறகு தான் அதில் இறங்கவேண்டும்.

செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க

செய்யாமை யானும் கெடும் (466) - என்ற பொய்யாமொழியும் நமக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

ஆர். கே. ரெட்டியார் தெய்வ பக்தி மிக்கவர்; காந்தி யடிகளிடம் பேரன்பு கொண்டவர். இயன்றவரை காந்தி யடிகளின் கொள்கைகளைக் கடைப் பிடித்தவர். கதராடை களையே அணிபவர். பாரதியார் கவிதைகளில் மிகவும் ஆழங்கால்பட்டவர். பாரதியாரின் 'கண்ணன் பாட்'டில் இவருக்கு மிக்க ஈடுபாடு உண்டு. கண்ணன்-என் சேவகன்" என்ற பாடலை அற்புதமாகப் பாடி நம்மை அதிலேயே மறக்கச் செய்து விடுவார். கேட்போருக்கு இன்னும் ஒரு முறை கேட்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். கீதையைப் படிக்காவிட்டாலும் அதன் முக்கியமான கருத்துகளின் ஒளியில் தம்மை நடத்திச் செல்பவர். திருவரங்கச் செல்வ னிடம் பேரன்பு கொண்டவர். ஆண்டுதோறும் நடை பெறும் அரங்கன் விழாவில் கணிசமான அளவுக்குத் தம் பொருளை விரயம் செய்யும் பெருமை பெற்றவர்.

X X X