பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 நினைவுக் குமிழிகன்-2

அக்காலத்தில் சென்னையில் அலுவல்கள் இருந்தமை யால் இரண்டு மூன்று பயணங்கள் இருந்தன. நான் தங்கும் இடம் பன்மொழிப் புலவர் வே. வேங்கடராஜுலு ரெட்டியார் இல்லம் (33, ராக்கியப்ப முதலியார் தெரு, மயிலாப்பூர், சென்னை- 4) ஆனால் சென்னை வரும் போதெல்லாம் குமரிமலர் அலுவலகத்திற்கு (100, மெளரிஸ் சாலை, ஆழ்வார் பேட்டை, சென்னை-18) வருவது தவறுவ தில்லை. இதனால் அலுவலகத்தில் செட்டியாருடன் இணைந்து பணியாற்றிய திரு. எஸ். கோபாலன் உறவு கிடைத்தது. திரு. கோபாலன் உரையாடுவதில் ஒப்பற்றவர். செட்டியாரிடம் இருந்த நகைச்சுவைப்பண்பு இவரை அதிக மாகப் பற்றவில்லை. ஆனால் சில நிகழ்ச்சிகளை இயல்பாகப் பேசுவார், அதில் கிண்டல் தொனி அடிநாதமாக வெளிப் படும். பெரிய பெரிய இலக்கியச் சுவைஞர்களின் தொடர்பு திரு. கோபாலனுக்கு உண்டு. பெரிய IAS, ICS அதிகாரி களின் தொடர்பு இருந்தது, காங்கிரசில் உள்ள பெரிய மனிதர்களின் தொடர்பும் இவர்கட்கு இருந்தது.

1948 முதல் திரு. செட்டியார் அவர்கள் மறையும் வரை (1984) செட்டியாரின் தொடர்பு இருந்து வந்தது. இறுதியாக சைவகித்தாந்த நூற் பதிப்புக்கழக அதிபர் திரு.வ. சுப்பையா பிள்ளை அவர்கள் மறைந்த அன்று 6, பவளக்காரத்தெரு, சென்னை-1 இல்லத்தில்தான் சந்தித்தது; அதன்பிறகு அவரைச் சந்திக்கும் வாய்ப்பு இல்ல்ை. 1984-இல் திரு. செட்டியார் அவர்களும் திருநாடு அலங்கரித்து விட்டார்கள் என்பதைச் செய்தித் தாள்கள் வாயிலாக அறிந்தேன். சில மாதங்கள் கழித்துக் குமரிமலர் அலுவலகத்தில் (அலுவலகம் லஸ் சர்ச் ரோடு) திரு. கோபாலனைப் பார்த்து துக்கக் செய்தியை விசாரித்தேன். அதன்பிறகு ஓராண்டுக்காலத் திற்குள் திரு. கோபாலனும் பரமபதித்து விட்டார் என்ற