பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம்-மதுரை 311

பிரியாதிருத்தல் போல நாமும் தாயும் தந்தையுமாய் இவ் வுலகினில் வாழும் ஈசனைப் பிரியாதிருத்தல் நன்று என்று தொணிப்பொருள் காட்டியுள்ளதை அநுபவிக்கின்றோம். வலஞ்செய்யும் ஆய மாயவன் கோயில் (2.10:8): ஆயன் + மாயவன்- ஆயமாயவன். வளஞ் செய்யும்’ என்ற அடை மொழியால் எம்பெருமான் தன்னையும் கொடுத்து தன்னை அநுபவிக்கைக் கீடான வலிமையையும் கொடுப்பவன் என்பது உணரப் பெறும். இதற்கு வேறு வகையாகவும் பொருள் கூறுவர்; திருச்சித்ர கூட பரிஸரத்திலே பிராட்டியுங்கூடக் கையைப் பிடித்துக் கொண்டு உலாவினாற்போல, பிராட்டி யைப் பிடித்துக் கொண்டு, அழகர் ஆதரத்தோடே லஞ்சரிக் கின்ற தேசம்” என்பது நம் பிள்ளை ஈடு, "அழகர் பிராட்டி மாரோடே கூட வலஞ் செய்கிற" என்பர் பெரியவாச்சான் பிள்ளை.

  • மழகளிற்றினம் சேர் மாலிருஞ்சோலை' (திருவாய் 2.10:9) என்ற திருவாய்மொழித் தொடரில் ஒரு நயத்தைக் காட்டுவர் நம் பிள்ளை; லட்சனோபேதமாயிருப்பதொரு ஆனை நின்றவிடத்தே ஆயிரம் யானைகள் வந்து சேரா நிற்கும். அங்கு நிற்கிறதோ சோலை மழகளிறு' என்பதாக திருமங்கையாழ்வார் அழகரை, சோலை மழகளிறே (பெரி. திரு. 4.9:2) என்றும், தென் ஆனாய் (திருநெடுந்.10) - தெற்குத் திருமலையில் நிற்கின்ற யானையே’ என்றும் விளித்தார். அப்படிப்பட்ட யானையின் அருகே மழ களிற்றினம் சேர்வது வியப்பன்று என்று காட்டியவாறு."

திருக்கோயிலின் பிரதான வாயிலாகிய தொண்டைமான் கோபுர வாயிலைக் கடந்து, திருக்கோயிலின் பிராகாரங்

8. இன்னும் திருமாலிருஞ்_சோலைமலை பற்றிய ಎಚ್ಟೆಹಳ್ಲಿ.7 இந்த ஆசிரியரின் பானடி காட்டுத் திருப்பதிகள் என்ற நூலில் 6-வது கட்டுரையில் 成仔邬,