பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களின் வளர்ச்சி 97 களைவிட இருமடங்கு பூசிக் கொண்டார்களாம். எப்படி இருக்கின்றது காட்சி? இந்தப் பாடலும் கம்பர் பாடியதாக கம்பராமாயணத்தில் பொதிந்து’ கிடக்கின்றது. இத்தகையவை கம்பர் பாடியவையாகக் கொள்ளலாகாது என்று கூறினால் புலவர்கட்குக் கோபம் வருகின்றது. வெட்கம்! வெட்கம்!! இப்படிப் பல இடங்களில் செருகு கவிகள் மயம். இத்துடன் இக்குமிழி அடங்குகின்றது. மேலும் அறிய வேண்டுவோர் கம்பர் காவியம்-அதன் நிலை விளக்கம் (1953) என்ற சொ. முரு.வின் நூலில் கண்டு கொள்ளலாம். இப்படி இரண்டு ஆண்டுகள் முருகப்பனாரின் கலைத் தொண்டில் நாங்கள் கலந்து கொள்ளும் பேறு பெற்றோம். முருகப்பனார் ஆச்சரியமான மனிதர். சமூக சீர்திருத்தப் பாங்கு இலக்கியத்திலும் புகத் தொடங்கிச் செயற்கரிய செயலைச் செய்யத் துண்டி விட்டது. ரசிகமணியின் கூட்டுறவும் ஈ. வே. ரா. பெரியாரின் தோழமையும்தான் இவருக்கு இத்தகைய துணிவைக் கொடுத்தன என்று கருது வதில் பொருத்தம் உண்டு. பெரியார் இராமகாதையைக் தீயிலிட வேண்டும் என்றார்; சொ. முரு. அதைத் திருத்திப் பயன் கொள்ள வேண்டும் என்றார். குருவிற்கும் சீடருக்கும் உள்ள வேற்றுமை இது! குமிழி - 1 17 11. சிறுவர்களின் வளர்ச்சி காரைக்குடியில் பல குழந்தை மருத்துவர்கள் உள்ளனர். தேவகோட்டையிலும் புகழ் பெற்ற மருத்துவர் ஒருவர் இருந்தார். வாரம் ஒரிரு முறை மாலையில் நி-7