பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலபல பள்ளிகள் 1 39° தாம் செய்யும் பொறுப்பை மேற்கொண்டார். செய்வன வற்றையெல்லாம் தெய்வப் பணிகளாகச் செய்து வந்தார். இத்தகைய வள்ளல் அமைத்த பயிற்சிக் கல்லூரியில் பணி யாற்றும் வாய்ப்பினை நல்கிய இறைவன் பற்றிய சிந்தனை சதா என் உள்ளத்தில் குமிழியிட்டுக் கொண்டே இருக்கும். 1 . அழகப்பர் மாதிரி உயர்நிலைப்பள்ளி : பயிற்சிக் கல்லூரி தொடங்கின மறு ஆண்டே பயிற்சிக் கல்லூரிக்கு சோதனைக் களம்போல் இலங்க வேண்டிய மாதிரிப் பள்ளியும் தொடங்கப்பட்டது. ஆசிரியர் தேவைக்காக விளம்பரம் செய்யப் பெற்றது. ஏராளமான விண்ணப்பங் கள் வந்தன. அழகப்பர் கல்லூரி வளாகத்தில் உள்ள கலைக் கல்லூரியில் எல்லாவிதப் பட்டப் படிப்புகளுக்கும் வாய்ப்பிருந்தன. ஆசிரியப் பயிற்சியில் பட்டப் படிப்புக்கும் வசதி. பொறியியல் கல்லூரி, பல துறை நுண்கலை பயிற்சி' நிலையம் (Polytechnic), மின்சார வேதியியல் ஆய்வு s5gyGJGSTlb (Electro-Chemical Research Institute) போன்ற நிலையங்கள் இருந்தமையால் இவற்றில் எல்லாம் பயில்வதற்கும், படிப்பு முடிந்தபின் வேலை வாய்ப்பிற்கும். இடம் கிடைக்கும் என்ற எண்ணத்தால் இத்தனை விண்ணப்பங்கள். திரு ஐ. என். மேனன் காலத்தில் மாதிரி பள்ளி தொடங்கப்பெற்றதால் பாலக்காட்டைச் சேர்ந்த அய்யர் ஒருவர் (மலையாளம்; தமிழ் பேசத் தெரியும்) தலைமையாசிரியராக நியமிக்கப் பெற்றார். காட்டுப்புத்துரர் உயர்நிலைப்பள்ளியிலிருந்து திரு. சங்கர நாராயண சாஸ்திரி வடமொழி ஆசிரியராகவும், இராதா கிருஷ்ணன் என்பவர் தமிழாசிரியராகவும், கண்ணன் என் பவர் இந்தி ஆசிரியராகவும் வந்து சேர்ந்தனர். இவர்கள் என்னிடம் நெருங்கிப் பழகினமையால் இவர்கள் பெயர்கள் நினைவிலிருக்கின்றன. இவர்களுள் திரு. சங்கர நாராயன சாஸ்திரியின் பிள்ளைகள் அனைவரும் (பெண் உட்பட)