பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டு விழர்க்கள் 3 (33 குறிப்பிடப் பெறுகின்றது. அஞ்சிலே ஒன்று (4) என்பது பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய பூமி. பெற்ற-பெறுவதற்குக் காரணமான சீதாபிராட்டி பூமிதேவியின் மகள் என் பதைக் காட்டுவது. அணங்கு கண்டு -பெண்ணைக் (பிராட்டியைக்) சேவித்து, அதுமன் சீதாபிராட்டியைக் கண்ட வரலாற்றைக் குறிப்பிடுவது. அயலார் ஊர்இலங்கை. அஞ்சிலே ஒன்று (5) என்பது நெருப்பு; இது பஞ்ச பூதங்களுள் ஒன்று. வைத்தான்-இட்டான். இலங்கைக்கு அநுமன் தீயிட்ட வரலாற்றைச்சுட்டியவாறு , அவன்-அப்படிப்பட்ட மேன்மையையுடைய அநுமன். அளித்து-தண்ணளி (கருணை) செய்து. காப்பான்-பாது காப்பான். யாம் தொடங்கிய நூலுக்கு இடையூறு வராத படிப் பாதுகாப்பான். ஆதலால், அப்பெருமானை வணங்கு வோம் என்பது. இப்பாடலில் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி என்ற ஐந்து பூதங்களும் கருத்தாக நின்று செயற்படுவதைக் கண்டு மகிழலாம். இவ்வாறு கூறி என் நண்பரை சாமியார் கருத்திற்கு இணங்க வைத்தது போதும் போதும் என்றாகி விட்டது. பேராசிரியர் சீநிவாசன் ஆட்சிக்காலத்தில் நடை பெற்ற ஆண்டு விழாவின்போது மாணவர்களைக் கொண்டு தமிழ் நாடகம் எழுதச் சொன்னார். அந்த ஆண்டு மாணவ ராக இருந்த கறுப்பண்ணன் என்பவர் எத்தன் ஏழுமலை’’ என்ற ஒரு நாடகம் எழுதி வந்தார். தலைப்பு நன்றாக இல்லை என்று சொல்லி அதை நிராகரித்தார். முதல்வர். பிறகுநானும் அந்த ஆண்டுமாணவராக இருந்த சு, செல்லப்ப லும் (இப்போது தமிழ் வளர்ச்சி இயக்கத்தின் இயக்குநராக இருக்கும் டாக்டர் சிலம்பொலி செல்லப்பன்) சேர்ந்து நன்கு யோசித்து இன்றைய உலகம்' என்று தலைப்பை மாற்றிப் புதுநாடகம் என்று சொல்லி முதல்வரிடம் இசைவு பெற்றோம். இதில் செல்லப்பன் தமிழ்ப் புலவராக நடித்ததாக நினைவு. நாட்கம் பல்லோர் புகழும்படியாக