பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டு விழாக்கள் 3紛リ பேராசிரியராகப் பணி ஏற்றிருப்பார். இவரைப் பெற கல்லுரரிக்கும் ஊழ் இல்லை; இவருக்கும் கல்லூரியில் பணியாற்ற ஊழ் இல்லாமல் போய்விட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் எத்தனையோ பேர் தமிழை விருப்பபாடமாக எடுத்துப் பயின்றனர். ஆனால் செல்லப்பன் அளவுக்குத் தரமுள்ளவர் வந்து சேரவில்லை. நான் காரைக்குடியை விட்டு வந்த ஆண்டில் கிட்டதட்ட செல்லப்பனையொட்டித் திறமை வாய்ந்த ரெ. சிங்காரவேலன்(பள்ளத்தூர்) சவகர்லால், கண்ணப்பன் (காரைக்குடி) என்ற மூவர் வந்து சேர்த்து தமிழ் வகுப்பிற்கு நற்பெயர் ஈட்டித் தந்த னர். சிலமணியில் வழியனுப்புவதற்காகப் பாடல்கள் எழுதி, மாலைக்குள் அச்சிட்டு விழா எடுத்து என்னை வழி யனுப்பி வைத்தனர். முதல்வர் ப. துரைக்கண்ணு முதலியார் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். நான் விட்ட ஆண்டு என் இடத்திற்கு யாரையும் நியமிக்க வில்லை. முதல்வரே என் பணியை நிறைவேற்றினார். அடுத்த ஆண்டு ரெ. சிங்காரவேலு தமிழ்விரைவுரையாள ராக நியமனம் பெற்றார். இவரும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு அழகப்பா கல்லூரிக்கு மாற்றப் பெற்று ஒன்றிரண்டு ஆண்டுகள் பணியாற்றித் தேவ கோட்டையிலுள்ள கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவ. ராகப் பணியாற்றி வருகின்றார். இப்போது பிஎச். டியும் பெற்று விட்டார். திரு. சிங்காரவேலனை அடுத்து தமிழ்ப் பணியை ஏற்றவர் திரு. கண்ணப்பன். இவர் பேராசிரியர் நிலைக்கு உயர்த்தப் பெற்று இன்றும் பணிபுரிந்து வரு கின்றார்; அண்மையில் இவரும் தம் பணியினின்றும் விலகிக் கொண்டார் என்ற தகவல் கிடைத்தது. நி-20