பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

袭多参 நினைவுக் குமிழிகள்.: விண்ணப்பித்தேன். குறைந்த காலமாகிய ஓராண்டிற்கு அப்பதவியை எனக்குத் தர நிர்வாகம் விரும்பவில்லை என்பதை நான் அறிந்து கொண்டேன். டாக்டர் வள்ளல் இருக்கும்போதே டாக்டர் மணவாள ராமானுசம் அவர்கள் (முன்னாள் துணைவேந்தர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) அழகப்பா பயிற்சிக் கல்லூரி நிர்வாகக் குழுவில், சென்னைப் பல்கலைக் கழகச் சார்பில் உறுப்பினராக இருந்தார். அவர் காரைக்குடி வரும் போதெல்லாம் அவரைச் சந்தித்து என் பதவி உயர்வில் துணைபுரியுமாறு வேண்டினேன்; அவரும் உடன் பாட்டில் பதில் தந்தார். அவருக்குப் பிறகு திரு. மு. ரா. பெருமாள் முதலியார் அவரிடத்தைப் பெற்றார். அவர் உதவியையும் நாடினேன்; அவரும் மகிழ்ச்சியுடன் உதவுவ தாகத் தெரிவித்தார். ஆனால் இவர்கள் இருவரும் உதவும் வாய்ப்பு நேரிடவில்லை. டாக்டர் வள்ளல் இருந்தபோதே (மறைவு 5-4-1957 பிறப்பு 3-4-1909) அவருடைய ஒன்று. விட்ட சகோதரர் K.W.A.M. இராமநாதன் செட்டியார் கல்லூரியின் தாளாளர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார்-ஏதோ கருத்து வேறு பாட்டினால். அந்தப் பொறுப்பை C. W. CT. W. வேங்கடாசலம் செட்டியார் ஏற்றார். இவரும் என்பால் மிகவும் அன்பு கொண்டிருந் தார். இவர் காலத்தில் தான் என் பதவி உயர்வுக்குரிய சந்தர்ப்பமும் எழுந்தது. இதற்கு முன்னர் வள்ளல் அழகப்பரும் திருநாடு அலங்கரித்து விட்டார். டாக்டர் வள்ளலுக்குப் பிறகு டாக்டர் அழகப்பச் செட்டியார் கல்வி 3 spéâL.Lostráð (Dr Alagappa Chettiar Education Trust) அக்காலத்தில் சென்னை மாநில நிதிகல்வி அமைச்சராக இருந்து சீரும் சிறப்புமாகப் பணியாற்றி வந்த சி. சுப்பிரமணியம் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். என் பதவி உயர்வு பற்றி இவரையும் சந்தித்து வேண்டுகோள் விடுத்தேன்; ஆவன செய்வதாக அன்புடன் தெரிவித்தார். இக்காலத்தில்தான் அணுவின்