பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நினைவுக் குமிழிகள்-; மறைந்த பிறகு மகன் நிழலில் இனிமையாக வாழ்ந்து வரு கின்றார். பத்து ஆண்டுகட்கு முன் பேத்தியின் திருமணத் தைக் கண்டுகளித்தார். நானும் அரங்கசாமி ரெட்டியாரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். இத் திருமணம் 1978-ல் கே , கே. நகரில் நடைபெற்றதாக நினைவு. இறுதியாக எட்டு ஆண்டுகட்கு முன்னர்(1981) அம்மை யாரையும் வீரபாண்டியனையும் அண் ை பொறியியல் பல்கலைக்கழக வளாகத்தில் பார்த்தேன். உத்தியோகத்தில் இருக்கும் ஒருவருக்கு B.E. படிக்க (மாலை நேரக் கல்லூரி யில்) இடம் வாங்கும் விஷயமாகச் சென்றிருந்தேன். இட மும் கிடைத்தது; அவரும் 8.E. பட்டம் பெற்று விட்டார். இப்போது வீரபாண்டியன் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகின்றார். அம்மா இருக்கும் இடம் தெரிய வில்லை. பேத்தியுடன் இருக்கின்றாரா? அல்லது மகனுடன் போய்விட்டாரா? என்பது அறியக்கூடவில்லை. உடல் பற்றிய பந்த பாசங்கள் எல்லாம் இப்படித்தான் . கீதையும் இதைத்தானே உணர்த்துகின்றது? ロ {} ra 1953-இராமகாதை-பாலகாண்டம் உரையுடன் வெளி வந்தது. பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் அவர் களின் முகவுரையும் பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை யவர்களின் அணிந்துரையும் நூலை அலங்கரிக்கின்றன. நூல் கம்பர் கவிச்செல்வத்தில் ஊறித் திளைக்கும் ராய. சொ. அவர்கட்கு உரிமையாக்கப் பெற்றுள்ளது. இதன் வெளியீட்டு விழா காரைக்குடி மீனாட்சி மகளிர் உயர் நிலைப் பள்ளியில் நடை பெற்றது. பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் விழாவிற்குத் தலைமைதாங்க வள்ளல் அழகப்பர் நூலை வெளியிட்டார். அறிஞர்கள் நூலைப் பாராட்டிப் பேசினார்கள், சொ.முரு. அவர்கள் பணித்தபடி அடியேனும் 15 மணித்துளிகள் பேசினேன். முரு. அவர்கள் தம்மிடமிருந்த தங்கத்தை (நகைகளாக இருந்தவற்றை) உருக்கி (150 சவரன் இருக்கும்) பால,