உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莒2《。 நினைவுக் குமிழிகள்-4 கடிதம் பல்கலைக்கழகத்திற்கு எழுதியிருப்பேன்; உண்மை நிலையும் வெளிப்பட்டிருக்கும். இந்த எண்ணம் என் மனத்தில் தோன்றாதது டாக்டர் தாமோதரனின் நல்லுரழ்ே என்று எண்ணத் தோன்றுகின்றது. துணிவே துணையாகக் கொண்ட எனக்கு இந்த எண்ணம் தோன்றாதது எனக்கு ஊழின்மையேயாகும். தத்துவத்துறையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி இப்போது நினைவிற்கு வருகின்றது. இத்துறைக்குப் பேராசிரியர் பதவிக்கு ஏற்பட்ட நியமனக் குழுவில் உளவியல் பேராசிரியர் ஒருவர் உறுப்பினராக அமர்ந்து விட்டார். இது தவறாக நிகழ்ந்து விட்டது. பேட்டியும் நிகழ்ந்து விட்டது. அப்போது துணைப்பேராசிரியராக இருந்த திருமதி சரசுவதி சென்னகேசவன் என்பாரும் (துறையிலே பணியாற்றிக் கொண்டிருந்தவர்) இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். பேட்டியும் முடிந்தது; முடிவு வெளியிடப் பெறவில்லை. ஆனால் பேட்டியில் உளவியல் பேராசிரியரைக் கண்ட அம்மையார் இதை எதிர்த்துப் பல்கலைக்கழகத்திற்கு எழுதினார்; தத்துவப் பேராசிரியர் இருக்க வேண்டிய இடத்தில் உளவியல் பேராசிரியர் அமர்ந் திருப்பது தவறு என்பதைப் பல்கலைக் கழகத்திற்குச் சுட்டிக் காட்டினார். பல்கலைக்கழகமும் தவறுதலை உணர்ந்தது. இந்தப் பேட்டியின் முடிவை அமுல் படுத் தாமல் மீண்டும் ஒரு புதிய குழு அமைத்து புதிதாகப் பேட்டியும் ஏற்படுத்தியது. தவறுதலைச் சுட்டிக்காட்டிய அம்மையாருக்கும் இந்தப் பதவி கிடைத்தது. இது டாக்டர் டி. சகந்நாத ரெட்டி துணைவேந்தராக இருந்த காலத்தில் நிகழ்ந்தது. இவர் காலத்தில் நிகழ்ந்த இன்னொரு நிகழ்ச்சியும் ஈண்டு நினைவிற்கு வருகின்றது. இது வரலாற்றுத்துறை பற்றியது. இத்துறையில் பணியாற்றிய டாக்டர் வி. எம். ரெட்டிக்கு ஒன்பதரையாண்டுகள்தாம் எம். ஏ.க்குக் கற்பிக்கும் அநுபவம் இருந்தது. வல்லுதர் குழு