பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/625

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தினைவுச் சிதறல்கள் 591 குனிந்து எடுத்து அதை ஒரு மூலையில் வைக்கப் பெற்றுள்ள குப்பைத் தொட்டியில் போடுவார்; பலருடைய கவனத்தை ஈர்ப்பதற்காக மெதுவாகவே இதைச் செய்வார்: நல்லெண்ணத்தோடுதான் இதைச் செய்வார்; பிறரும் இவ்வாறு செய்தல் வேண்டும் என்பதற்காகவே செய்து காட்டுவார். இதைச் சில எழுத்தர்கள், கடைநிலை ஊழியர்களில் யாரோ ஒருவர் துணைவேந்தர் செய்யும் பாவனையில் செய்து காட்ட, பிறர் இதைக் கண்டு நகைப்பர். இச்செயல் நாடகபாணி .யில் செய்யப் பெறுவதால் நகைப்பிற்கு இடமாகிச் சிரிப்பை விளைவிக்கும். இச்செயல் ஒருவித போலி நடிப்பாகத் (Mimicry) தோற்றும். இவர் காலத்தில் பல்கலைக் கழகத்தில் நிலவிய ஒழுங்குமுறை வரவரத் தளர்ந்து இப்போது அதுவே இல்லை என்ற தோற்றம் அளிக் கின்றது. இவரையும் இவர் காலத்தில் பதிவாளராக இருந்த M.K. இராமகிருஷ்ணனையும் (ஆங்கிலப் பேராசிரியர்) சில நகைச்சுவைப் பேராசிரியர்கள் டான்குக்ஸாட் சாங்கோ 1ான்சாவாக உருவகப்படுத்திப் பேசுவதுண்டு. துணை. வேந்தர் தெலுங்கர் (இல்லை, தமிழர்); பதிவாளர் ஒரு மலையாளி (கேரளத்தைச் சேர்ந்தவர்). வட்டரங்குகளில் சிங்கம், புலி, யானை போன்ற மிருகங்களை அடக்கி யாள்பவர் பெரும்பாலும் மலையாளிகளாகவே இருப்பர். இக்காட்சியை நினைந்த வண்ணம் சிலர் துணைவேந்தரைச் சிங்கமாகவும் பதிவாளரை அதை நெறிப்படுத்தும் மலையாளியாகவும் உருவகப்படுத்திப் பேசுவதுண்டு. பொதுவாக இத்தகைய கேலிப் பேச்சில் உண்மையும் இருக்கும். ஆனால் எவரும் இருவர் உள்ளத்தையும் துன்புறுத்தும் நோக்கில் செய்வதில்லை . இவர்கள் காலத் தில் நடைபெற்ற நிர்வாகம்போல் இவர்கட்குப்பின் இன்றளவும் அமையவில்லை. [...] D 町 டாக்டர் K. சச்சிதானந்த மூர்த்தி துணைவேந்தராக இருந்தபோதுதான் 1976-பிப்பிரவரியில் என் மூத்தமகன்