பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் கலந்துகொண்ட இலக்கிய மாநாடுகள். 密密历 T. கோதண்டராமய்யாவையும் பேராளர்களாகக் கலந்து கொள்ள அனுப்பியது பல்கலைக் கழகம். நான் கம்பன் கண்ட மெய்ப்பொருள்' என்ற ஆய்வுக்கட்டுரையை அனுப்பி வைத்தேன். இந்தக்கட்டுரை என் மணிவிழா வெளியீடாக வந்த அறிவியல் தமிழ் என்ற நூலில் சேர்ந்தது. முதல் கருத்தரங்கு மூன்று நாள் சிறப்பாக நடைபெற்றது. என் கட்டுரை டாக்டர் மொ. அ. துரை அரங்கசாமித் தலைமையில் படிக்கப் பெற்றது. 1969-அக்டோபர் 29, 30, 31 நாட்களில் அனைத்திந்திய கீழ்த்திசை மாநாட்டு கருத்தரங்கின் 25-வது (வெள்ளிவிழா) அமர்வு கல்கத்தாவில் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. என்னையும் தெலுங்குத் துறையில் இருவரையும் பல்கலைக் கழமே பேரா ள ர் க ளாக க் கலந்து கொள்ள அனுமதித்தது. சென்னையிலிருந்து நான் புறப்பட்ட இருப்பூர்தியிலேயே டாக்டர் மு. வ. டாக்டர் சங்கரராஜா நாயுடு (இந்திப் பேராசிரியர் சென்னைப் பல்கலைக் கழகம்), டாக்டர் K K. இராஜா (வடமொழிப் பேர: சிரியர், சென்னைப் பல்கலைக் கழகம்) ஆகியோர் பயணம் செய்தமையால் இருப்பூர்திப் பயணம் அற்புதமாக அமைந்தது.என்னுடைய நகைச்சுவைப் பேச்சும்சுவையான பலகுட்டிக்கதைகளையும் எல்லோரும் நன்கு சுவைத்தனர். சில வாரங்கட்கு முன்னர்தான் சென்னையில் டாக்டர். K.K. இராஜாவுக்கு பேராசிரியர் பதவி கிடைத்திருந்தது. நான் டாக்டர் இராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தேன். அவர் அதைச் சுவையுடன் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் சொன்னார்."என்னை மதிப்பிட உங்கள்.T.K.கோபாலசாமி அய்யங்கார் வல்லுநர் குழுவில் இருந்தது எனக்கு அவமான மாய்ப் போயிற்று. என் உற்சாகம் முழுவதும் சிதைந்தது. பதவி உயர்வு எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை' என்றார். 2. டாக்டர் கோதண்டராமய்யா இன்று (17-4-90) இல்லை, பல்லாண்டுகட்கு முன்னரே திருநாடு அலங்கரித்துவிட்டார்.