பக்கம்:நினைவுச்சரம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் #63,

இழந்த பெண் வெள்ளேச் சீல்ேதான் கட்டவேண்டும் என் றிருந்த கட்டாயம் காலவேகத்தில் தானகவே அடிபட்டுப் போயிற்று. கணவனை இழக்க நேரிடுகிற இளம் பெண்கள் மட்டுமின்றி, வயது அதிகமான மகளிர்கூட சகல வர்ணச் சீலைகளேயும் கட்டிக்கொள்வது நாகரிக நியதியாகவும் சகஜ வழக்காகவும் ஆகிவருகிறது என்பதை நினைத்துத்தான்; செண்பகத்தைப்பற்றி எந்தவிதமாக முடிவுகட்டுவது என்று குழம்பினர் பெரியபிள்ளே.

அவ புருசன் இருந்தும் ஒண்ணுதான், இல்லாமல் போனலும் ஒண்னுதான். அவளுலே செம்பகத்துக்கு ஒரு காலத்திலும் நன்மை ஏற்பட்டதில்லை. அவன் இருக்கான செத்தொழிஞ்சு போனுகு என்பதைப்பற்றி அவள் கவலேப் படுவதையும் முன்னமேயே விட்டுட்டா என்று பிறவியா பிள்ளே சொன்னுர்.

ஏன், என்ன விசயம்? அவளுக்கு எந்த ஊரிலே கலி யாணமாச்சு??

செம்பகத்துக்கு ரொம்பநாள் கலியாணம் ஆகாமலே இருந்தது. அவ தாயார் பொன்னம்மா,மகளுக்கு மணம் முடிச்சு வைக்க ரொம்பவும் கஷ்டப்பட்டா, அலேயாத ஊரு இல்லே, சொல்லாத ஆள் இல்லேன்னு மிகுந்த பிரயாசை எடுத்துக் கிட்டா. நான் அப்போ சின்னபயலாகத்தான் இருந்திருப் பேன். நடந்த விவரம் எல்லாம் எனக்கு நல்லாத் தெரியாது. அப்பா சொல்லியும், பொம்பிளேகள் பேச்சு மூலமும் தெரிஞ்சுக் கிட்டதுதான். செம்பகம் தனக்குக் கல்யாணமே ஆகாதுன்னு: தீர்மானிச்சிட்டா ; அவ அழுது கண்ணிர் வடியாத நாளே கிடையாதுன்னு அப்போ சொல்லிக்கிட்டாங்க. அவளேயத்தி யாரோ மோசமா கதை கட்டிவிட்டிருந்தாங்க போலிருக்கு. நம்ம ஊரைப்பத்தி சொல்லனுமா? இந்தக் கலையிலே ரொம்பக் கைதேர்ந்தவங்களாச்சே நம்ம ஊர்காரங்க அதுேைலயும் அவளுக்கு கலியாணம் ஆகிறது தடைபட்டு வந்தது போலி ருக்கு. இருபத்தஞ்சாவது வயசிலேயேதான் அவளுக்குக் கல்யாணம் நடந்தது. மாப்பிள்ளேக்கு சங்கரன் கோயிலோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/163&oldid=589412" இலிருந்து மீள்விக்கப்பட்டது