பக்கம்:நினைவுச்சரம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 225

கற்பிக்கிறது; கற்றுக்கிட வசதிகள் செய்து கொடுப்பது; அப்புறம் அவனுக்கு ஒரு வேலே கிடைக்கும்படி செய்றது; இதெல்லாம் அவனே வாழவைக்கிறது ஆகும். அதேமாதிரி கல்யாணம் ஆக வழி இல்லாமல் காத்திருக்கிற ஒரு கன்னிக்கு மணம் முடிச்சு வைப்பது அவளுக்கு வாழ்க்கை அளிப்பது ஆகும். மற்றவங்களே கெடுக்கிறமாதிரி அபவாதங்களேயும் பழிச் சொல்களையும் பரப்புவதா நல்ல செய்கை?...வெறும் பயல்கள் வெறும் பயவிகள் !

அவர் நடந்துகொண்டே சிந்தித்தார். யோசித்துக் கொண்டே இருட்டில் நடை போட்டார்.

- கணபதியா பிள்ளே எனக்கு வாழ்க்கை அளித்தார். அவருக்கோ அவர் குடும்பத்துக்கே நான் உபகாரம் செய் தால்தான், நன்றியோடு இருப்பதாகும் என்று கொள்ள வேண்டும் என்றில்லை. அவாள் செயலே மறக்காமலிருக்க, என்னல் இயன்ற அளவு வேறுயாருக்காவது உதவிகள் செய்தும், ஒருவரையாவது வாழவைக்கத் துணே புரிந்தும் காரியங்கள் செய்தால், அதுதான் உண்மையான நன்றிக் கடன் தீர்ப்பது ஆகும். நான் ஒருவனுக்கு உதவி செய்தால், அவன் மூலமே எனக்கு நன்மையும் பிரதி உபகாரமும் வந்து சேரனும்கிற கட்டாயம் அல்லது நியதி எதுவும் இல்லே. நான் என்னலியன்ற உதவிகளேயும், நல்லதுகளையும் செய்து கொண்டே இருக்க வேண்டியது. வேறு வழிகளில் எனக்கு நன்மைகள் வந்து சேரும். நன்மைகளும் லாபங்களும் வந்து சேராவிட்டாலும் ஒன்றுமில்லே. அப்படி நல்லதுகளும் லாபங் களும் வரும் என்று நம்பி, என்னுல் இயன்ற அளவு நன்மைகளே செய்வது கூட ஏதோ ஒரு வாணிபம்தான். நல்லதுகளே, பிறருக்கு உதவிகளே, செய்து கொண்டிருப்பதனு: லேயே ஒரு மனநிறைவும் சந்தோஷமும் உண்டாகுமே, அதற் காகவே அவற்றைச் செய்யலாம். ஒரு சிலராவது சந்தோஷ மாக இருப்பதற்கு நம்மாலானதை செய்தேசம் என்ற திருப்தியே போதும். மற்றவங்க என்ன சொன்னுல் என்ன? எவ்வளவு கேவலமா நினைத்தா நமக்கு என்ன !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/225&oldid=589484" இலிருந்து மீள்விக்கப்பட்டது