பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 211 இன்று தமிழ்நாட்டின் கல்லூரி மாணவர் சமுதாய நிலையில் ஏற்பட்டிருக்கும் தலைகீழ் மாற்றத்திற்குப் பலரும் பலவும் உதவினர். ஆற்றுப் பெருக்கு சில நாள்கள் ஒடினால் போதும். இரு கரைகளிலும் வழிநெடுகிலும் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்துவிடும். அரசியல் விடுதலை உணர்வு வெள்ளம்போல் பெருகியது. தன்னாட்சியைப் பெற்றுத் தந்ததோடு நிற்கவில்லை. பிற உரிமை உணர்வுகள் சுரக்கவும் உதவியது. ஏழை எளியவர்களுக்கும் கல்வி உரிமை - உயர்கல்வி உரிமை உண்டு என்னும் உணர்வைப் பெருக்கிப் பொங்க வைத்தது. தந்தை பெரியார் நீண்ட, இடையறாத பொதுத் தொண்டால் தூங்கிக் கிடந்தவர்களைத்தட்டி எழுப்பினார். ஊர்ஊராக நாடிச்சென்று குட்டிக் குட்டி விழிக்க வைத்தார். பெரியார் ஆழ உழுது பண்படுத்தி வைத்தபிறகு, கர்மவீரர் காமராசர் கல்விப் பயிரைத் தமிழ்நாடு முழுவதிலும் செழிப்பாக வளர்த்தார். பல பெரியவர்கள் பட்ட பாட்டால், உயர்கல்விகூட ஏழைகளுக்குத் தாராளமாக எட்டிவிட்டது. குதிரையைக் குளத்தருகே கொண்டு போய் நிறுத்தலாம். நிறுத்தியவர் குடித்தால் குதிரைக்குத் தாகம் தீருமா? குதிரையல்லவா குடித்துத் தாகத்தைத் தனித்துக் கொள்ள வேண்டும்? o மேற்படிப்பு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எட்டுமா? பின்தங்கியவர்களை வளர்க்குமா?’ என்னும் கேள்விகள், இன்றும் கேட்கின்றன. மேடையில் கேட்பதைவிட கூடத்தில், திண்ணையில், தேன் சுரக்கக் கேட்கிறார்கள். இப்படிக் கேட்பவர்களைத் திட்டிப் பயன் என்ன? ஒன்றுமில்லை. மாறாக, அந்தக் கேள்விகளை அறைகூவல்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். செம்மையாகக் கற்று நன்றாகத் தேர்ச்சி பெற்றுப் பதில் உரைக்க வேண்டும். தரமாகத் தேர்ச்சி பெறுவதன் மூலம், தங்களுக்கும் மேற்படிப்பு எளிது என்பதை மெய்ப்பிக்க வேண்டும். στοοσο πά. சாதியாரும் கல்வியில் உயரலாம் ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்பே, சாதிக்கும் படிப்பிற்கும் தொடர்பு இல்லை; ஒதுக்கப்பட்ட சாதியில் பிறந்துவிட்ட போதிலும், மேல்சாதிக்காரர்களைப் பின்னடையச் செய்துவிட்டு, முதற் பரிசுகளைத் தட்டிக் கொண்டு போக முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/253&oldid=787055" இலிருந்து மீள்விக்கப்பட்டது