பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Յ06 நினைவு அலைகள் முன்வரத் தயங்கவில்லை.....ஒத்துழையாமைப் போராட்டத்துக்கு ஆக்கமளித்தது தென்னாட்டவர் தந்த ஆதரவே எனலாம். நம்மவர் ஆதரவு இல்லாவிட்டால் போராட்டத்தை நடத்த காங்கிரசே முன் வந்திருக்குமா என்பது சந்தேகமே என்று மூதறிஞர் இராஜாஜி 1935 இல் இந்து வில் எழுதினார். 1930 இல் நடந்த உப்புச் சத்தியாகிரகத்திற்கும் இது பொருந்தும். காந்தியடிகளின் தலைமையில் வடக்கே தண்டியில் உப்புக் காய்ச்சும் புதுமுறைப் போராட்டம் நடந்தது போன்றே, தமிழ்நாட்டில், திரு. சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் தலைமையில் சட்டத்தை மீறி உப்பு எடுக்கும் போராட்டம் நடந்தது. போராட்டக் களம் எங்கே? வேதாரண்யத்தில் சைவத்துதி இலக்கியங்களில் 'திருமறைக்காடு' என்று அழைக்கப்படும் அதே ஊரில் விடுதலைப் போர்க்களம் அமைந்தது. இந்தச் சத்தியாக்கிரகம், நம் விடுதலைப் போராட்ட வரலாற்றில் சிறப்பான அதிகாரமாக அமைந்தது. 'திருச்சியில் இருந்து நடந்துவரும் நூற்றுவர் அணிக்குப் பொதுமக்கள், உணவு, உறையுள் முதலிய எவ்வித உதவியும் செய்யக்கூடாது என்று பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரிகள் கெடுபிடிகள் செய்தார்கள். பொதுமக்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. - நீண்ட கடற்கரையையுடைய தமிழ்நாட்டில், பல உப்பளங்களையு டைய தமிழ்நாட்டில், திருமறைக்காடு என்னும் சிற்றுாரைத் தேர்ந்தெடுப்பானேன்? காரணங்கள் பலவாக இருக்கலாம். அவற்றில் மிகமிக முக்கியமான ஒன்றைக் குறிப்பது என் கடமை. முதலில், காந்தியப் போராட்ட முறை பற்றிச் சில சொற்கள். 'கத்தியின்றி ரத்தமின்றி நடக்கும் போர்முறை, உலகிற்குப் புதிது. அன்றுவரை பழக்கப்பட்ட முறைகளுக்கு நேர்மாறானது. நம் அனைவருடைய குருதியிலும் வாழையடி வாழையாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் போக்கு என்ன? 'உதைக்கு உதை, குத்துக்குக் குத்து; வெட்டுக்கு வெட்டு; பழிக்குப் பழி இதுவே நம்மில் இரண்டறக் கலந்துவரும். இயல்பு, இவ்வியல்புக்கு முரணானது, காந்தியப் போர் முறை. தன்னை வருத்திக் கொள்ளல், பிறர்க்கு இன்னாசெய்யாமை, பகைவரையும் திருப்பித்தாக்காத அருளுணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் உருவானது, காந்தியப் போராட்டமுறை. வழிவழி வரும் பழிவாங்கும் போக்கைத் தடுத்தாண்டு செயல்பட, மலையளவு உறுதி தேவை. அது காளான் அல்ல; பாடு பட்டு ப் பயிரிடப்படுவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/348&oldid=787187" இலிருந்து மீள்விக்கப்பட்டது