பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 நினைவு அலைகள் - 'அக்கடிதங்களில் உள்ள ஆலோசனைகள், கோரிக்கைகள், எந்தெந்தச் சட்டப்பிரிவில், விதிமுறையில் வரும். அதற்கு ஆணையிடும் அதிகாரம் எவருடையது? 'இவற்றையெல்லாம் ஆய்ந்து, பதில் எழுத, முனையாதீர்கள். அப்படிச் செய்வதானால், காலதாமதம் நேரிடும்; பதில் போடச் சில நாள்கள்ஆகும். ஊரார் உங்களை மெத்தாதி, என்று இகழ்வாக நினைத்து விடுவார்கள். 'மாறாக, கடிதம் வந்ததும் படிக்கக்கூட வேண்டாம். முதலில் அதைத் திருப்புங்கள். பின்புறத்தில் 'திருப்பி அனுப்பப்பட்டது' என்று எழுதுங்கள். அப்புறம் அதற்கு ஒரு காரணம் கண்டுபிடிப்பதற்காக, முன்பக்கத்தைப் பாருங்கள். அதிலும் அதிகநேரம் செலவழிக்காதீர்கள். சில மணித்துளிகளில் ஒரு காரணமும் தோன்றாவிட்டால், இதில் இடப்பட்டுள்ள கை எழுத்து, ஊராட்சி மன்றத் தலைவருடையதா?" என்றாகிலும் கேட்டு உடனே கடிதங்களைத் திருப்பிவிடுங்கள். 'பெரும்பாலான ஊர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள்தான் தபால் கொடுப்பார்கள். நீங்கள், கடிதம் வந்த நாளே, பதில் எழுதியதைப் பார்த்து ஊரார் வியப்பில் மூழ்குவார்கள். நீங்கள் ‘பச்சை மிளகாய்' என்று பெயர் எடுக்கலாம் என்று திரு இராசகோபால் பெரும்பாலான அரசு அலுவலர்கள் பின்பற்றி வரும் வழியை எனக்குக் காட்டினார். நான் அதைக் கேட்டுக் கொண்டேன். ஆனால் பின்பற்றவில்லை. அன்றைய செங்கற்பட்டு மாவட்டத்தைப் பஞ்சாயத்துத் தணிக்கைக்கு மூன்றாகப் பிரித்தார்கள், மதுராந்தகமும், செங்கற்பட்டு வட்டமும், காஞ்சிபுரம் வட்டமும் சேர்ந்தது ஒரு பகுதி. அதன் தலைநகரம் மதுராந்தகம் ஆகும். திருவள்ளூரும் பொன்னேரியும் சேர்ந்தது மற்றோர் பகுதி. அதன் தலைநகரம் திருவள்ளுர். பாக்கியுள்ள சைதாப்பேட்டை வட்டமும் திருப்பெரும்புதூர் வட்டமும் இணைந்து, மூன்றாம் பகுதி. அதன் தலைநகரம் சைதாப்பேட்டை. மதுராந்தகமும் திருவள்ளுரும் வசதியான பகுதி. சைதாப்பேட்டை சற்றுத் தொல்லையானது. இதை எனக்குக் கொடுத்தார்கள். ஒரு வகையில் அதை நான் விரும்பினேன். சென்னையில் குடியிருந்தபடியே வேலை பார்க்கலாம். அப்போது சைதாப்பேட்டை சென்னையோடு இணைந்து இருக்கவில்லை; தனி நகராட்சியாகயிருந்தது. செங்கற்பட்டு மாவட்டத்தின் தலைநகராக விளங்கியது. நான், சென்னையில் என் தம்பியின் அறையில் தங்கியபடியே வேலையைக் கவனித்தேன். தொடக்கத்தில் சில நாள்கள் சைதாப்பேட்டை அலுவலகம் சென்று வருவதோடு முடிந்தது. பிறகு.?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/489&oldid=787392" இலிருந்து மீள்விக்கப்பட்டது