பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/649

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

606 நினைவு அலைகள் 'இருதண்டவாளங்களும் வளையாமல் நெளியாமல் விலகாமல் தாழாமல் உறுதியாக நிலைத்து நிற்பதால்; வழி நெடுகிலும் அதே இடைவெளியில் இழையளவும் மாறுபடாமல் இருப்பதால் இயல்கிறது. 'நேர்மை, வாய்மை என்னும் இரு உறுதியான இணைமாறாத, தண்டவாளங்களின்மேல், நம்முடைய வாழ்க்கைப் பயணம் சொல்லுமானால், நம் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக நடக்கும். இது சச்சிதானந்தரின் நீண்ட உரையின் சுருக்கமாகும். அந்த நல்லார் வாய்மொழி என் நெஞ்சில் பதிந்தது; என்னில் இரண்டறக் கலந்தது; என்னை நல்வழியில் இயக்கிற்று; இன்றும் இயக்குகிறது. நாளையும் இயக்குமென்பது, வெள்ளிடை மலையாகும். அக்கூட்டத்தில், அவர் முன்னர் சில சொல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. எப்படியோ அவை அச்சம் இன்றிப் பேசிய என்னை அப்பெரியவர் மிகவும் வியந்து பாராட்டினார். காலத்தினாற் செய்த அந்த உதவி எனக்கு ஞாலத்தினும் பெரிதாகத் தோன்றியது. 90. பள்ளிகளின் நிலை ஊர் ஊராக அலைந்தேன் இளந்துணை ஆய்வாளருக்கு நெடுந்தொலைவில் - எளிதில் போய்ச் சேர முடியாத ஊர்களில் உள்ள பள்ளிகளை ஒதுக்குவதே மரபு. அவ்வகையில், பொன்னேரி வட்டத்தில் சாலை வசதி பெறாத பள்ளிகள் பல எனக்குக் கொடுக்கப்பட்டன. அக்காலத்தில், இன்றைக்கு இருக்கும் அளவு பள்ளிகள் இல்லை. எனவே, பொன்னேரி இளந்துணை ஆய்வாளருக்கு அவ்வட்டத் திலேயே போதிய வேலை இல்லை. அடுத்துள்ள திருவள்ளுர் வட்டத்தைச் சேர்ந்த பள்ளிகள் சிலவும் என் கண்காணிப்பிற்கு ஒதுக்கப்பட்டன. 'தணிக்கை பாக்கி பெரிதாக இருப்பதற்கு நான் என்ன செய்ய என்று தட்டிக் கழிக்கும் போக்கு, நழுவிக் கொள்ளும் போக்கு எனக்கு ஏற்படவில்லை. எப்படியும் எல்லாப் பள்ளிகளையும் தணிக்கை செய்து முடிப்பதற்காக ஊர் ஊராக அலைந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/649&oldid=787617" இலிருந்து மீள்விக்கப்பட்டது