பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/661

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

618 நினைவு அலைகள் 'எனக்குச் சம்பளம் படியளக்கும் பிரசிடெண்ட் கேட்கட்டும்; அல்லது ஆய்வாளர் கேட்கட்டும். பாடத்தைப் பற்றிக் கேட்க நீங்கள் யார்? என்று மதியாமல் பேசிவிட்டார். 'என்னை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை. அவரை ஒழுங்காகப் பாடம் சொல்ல வைத்தால் போதும் என்று புகார் எழுதியிருந்தர்ர். அது மொட்டைக் கடிதம் அல்ல. உண்மையான பெயரும், சரியான முகவரியும் உடைய கடிதம். இதிலே கண்டு இருக்கும் புகார் உண்மைதானா? அதற்குப் பள்ளி ஆசிரியர் பொறுப்பாளியா? 92. நீதி எங்கே? குற்றச்சாட்டு சரியா? பூகோள பாடத்தைப் பழைய முறைப்படி சொல்லிக் கொடுக்காமல், கதையாகச்சொல்லிக்காலங்கழிக்கிறார் என்னும் குற்றச்சாட்டு மெய்யா பொய்யா என்பது எனக்கு வெளிச்சமாகிவிட்டது. i அது போதுமா? பொறுப்புள்ள பெற்றோர்களுக்குத் தெரியவேண்டாமா? அது பற்றிப் புகார் செய்தவருக்காகிலும் விளக்கிக்கூறி இருக்கவேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியரும் அதைச் செய்யவில்லை. ஏன்? பொதுமக்களைப் பொருட்படுத்தாது இருத்தல் நம் நெடுநாளைய போக்கு. மக்களைப் புல்லாக ஒதுக்குதல் இந்நாட்டுத் தீங்கு, அன்னியர் ஆட்சிக் காலத்திலும் அத்தகைய அகந்தை குறையவில்லை; மாறாகக் கூடிற்று. முப்பத்தேழு ஆண்டு தன்னாட்சியும் நிலைமையைச் சிறிதும் மாற்றவில்லை. அரசு ஊழியர்கள் பொதுமக்களின் ஊழியர்கள்; பொதுமக்களை மதிக்க வேண்டிய ஊழியர்கள். பொதுமக்களின் நலனுக்காகவே உழைக்க வேண்டியவர்கள். பொதுமக்களின் எல்லாப் பிரிவினரின் நம்பிக்கைக்கு உரியவர்களாகச் செயல்பட வேண்டியவர்கள். இவ்வுணர்வுகள், முப்பத்தேழு ஆண்டு மக்கள் ஆட்சிக்குப் பிறகும் பரவித் தழைக்கவில்லை. அப்படியிருக்க, நாற்பதாண்டுகளுக்கு முன்பு, நாலெழுத்து கற்று, நாலு பணம் கையில் ஒழுங்காகப் பார்த்த ஆசிரியர், ஊர்க்குடியானவரை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. சரி ஆய்வாளராகிய நான் என்ன செய்தேன் புகார் செய்தவருக்குக் கடிதம் எழுதினேன். ஒரு நாளையும் மணியையும் குறிப்பிட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/661&oldid=787631" இலிருந்து மீள்விக்கப்பட்டது