பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/732

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 691 அதிரடிக்கு எதிரடி இச்செய்தியைக் கேட்ட பெரியார் ஈ.வெ. ராமசாமி வெகுண்டார்: வன்மையாகக் கண்டித்து எழுதினார், அதோடு முடிந்ததா கதை? இல்லை. ஈரோடு, மகாஜன உயர்நிலைப்பள்ளி, அப்போது பெரியார் ஈ.வெ. ரா.வின் மேலாதிக்கத்தில் இருந்தது. உரியவர்களிடம் சொல்லி, வைதீகக் கோலத்தோடு பள்ளிக்கு வந்துகொண்டிருந்த மூன்று பார்ப்பன ஆசிரியர்களுக்கு, அதைக் காரணம் காட்டி வேலை நீக்க ஆணை பிறப்பிக்கச் செய்தார். வேதனையான போக்கு அல்லவா இது? என்றைக்கோ. எவரோ மூட்டிய இறுமாப்புத் தீ, அதில் எழுப்பும் பகைப் புகை பரவிக் கொண்டே இருக்கலாமா? 'குத்துக்குக் குத்து, வெட்டுக்கு வெட்டு, என்கிற போக்கு எத்தனை காலம் தொடர்வது? பிறவி இழிவு என்கிற கொடுமையைப், பிறர் மேல் திணிப்பதால், இந்த நாடு இசுலாமிய நாடாகும் நிலை உருவாகிப் போகலாமென்பதை மீனாட்சிபுர மின்னல் காட்டிய பிறகும், உயர்வு தாழ்வுகளை நிலைநிறுத்தும் சிந்தனையிலே சுழல்வது, சமுதாயத் தற்கொலையல்லவா? சாக்கோட்டைச் சுயமரியாதை படிப்பக ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு வாருங்கள். என் உரை எதிர்பாராது, அவ்வூர்ப் படிப்பக ஆண்டு விழாவிற்குச் சென்ற என்னையும், உரையாற்றும்படி வற்புறுத்தினர். தட்டமுடியாது உரையாற்றினேன். 'மனித வாழ்வு என்பது வயிறார உண்பதும், போதுமளவு உடுத்துவதும், பாதுகாப்பாக உறங்குவதும், குழந்தை குட்டிகளைப் பெறுவதும் மட்டுமே என்று ஏமாற வேண்டாம். 'அறிவு வாழ்க்கையே, மக்கள் வாழ்க்கை. அறிவைப்பெற, கல்வி முதல் வாய்க்கால்; கேள்வி அடுத்த வாய்க்கால், இரண்டையும் தேடிக் கொள்ளுங்கள். a - 'கல்வி பெறும் மதகு, எழுத்தறிவு ஆகும். அந்நுழைவாயில் மிகப் பெரும்பாலோர்க்குத் தொலைவிலேயே உள்ளது. தற்குறிகளாக இருப்போர் எப்படி மானவாழ்வு வாழ இயலும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/732&oldid=787732" இலிருந்து மீள்விக்கப்பட்டது