பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. புயலில் சிக்கினோம்

ஆண்டு தோறும் புயல்

மக்கள் மனம் குரங்கிற்கு ஒப்பானது. ஆன்றோர், மனித மனத்தை ஏன் அப்படி மதிப்பிட்டார்கள்? அது என்ன செய்யும் என்ன செய்யாது என்று முன் கூட்டிச் சொல்ல முடியாது; நொடியில் உணர்ச்சி வயப்படும்; செய்யக் கூடாததைச் செய்யும். அதே போல், நொடிப் பொழுதில் செயற்கரியதைச் செய்து படிக்கும்.

இதற்கு அசோக மாமன்னன் சிறந்த எடுத்துக் காட்டல்லவா?

கொன்று குவித்து நாடு பிடிப்பதைப் பெருமையாகக் கருதிய, அம் மாமன்னர், கலிங்கப் போரில் வெற்றிகண்டார். ஆனால் போரின் அறிவைக் கண்டு அதன் கொடுமை பற்றி ஒருகணம் சிந்தித்ததும் வெறியிலிருந்து விடுபட்டார்.

மக்கள் உணர்ச்சி வயப்பட்டு இயங்குகையில், இயற்கையோ மாற்றறியாத சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கிறது.

ஞாயிறு போற்றுவதால், விரைந்து வருவதில்லை; துாற்றினால் நாமதித்து வருவதில்லை. அதற்கு உரிய முறையில் இருந்து, பிறழாது பயங்கி வருகிறது.

அதனால்தான், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சான்றியதாகக் கருதப்படும் ஞாலம் நிலைத்து இருக்கிறது.

மண்ணுருகப் பெய்து. பொன்னுருகக் காயும் பருவம், சில விளைவுகளுக்குக் காரணமாகிறது.

அதில் ஒன்று, நவம்பர் கடைசியில் தவறாது நிகழ்ந்து வருகிறது. இந் நூற்றாண்டின் தொடக்கம் முதல் நிகழ்ந்து வருகிறது. எதை எதையோ, தெரிந்து வைத்து இருக்கும் நாம், அதைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்ளத் தவறிவிட்டோம்.

அது என்ன? #

புயல் வங்காள விரிகுடாவிலிருந்து புறப்படும் புயல், கிழக்குக்

ற்கரை நோக்கி நகர்ந்து, விரைந்து, பின்னர்ச் சீறியடிக்கும் புயல்!

நவம்பர் இருபதுக்கும் இருபத்தேழுக்கும் இடையில் இப் புயல் ந்ெதியாவின் கிழக்குக் கரையைக் கடந்து, வெள்ளத்தையும் அறிவையும் அள்ளி வீசி விட்டுப் போய்க் கொண்டிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/109&oldid=622962" இலிருந்து மீள்விக்கப்பட்டது