பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரு து. சுந்தரவடிவேலு 201

கருவி).ணன் ஆகியோர் நல்ல திறமையான பணியாளர்கள். அவர்களின் பி|திய இருவரும் பிற்காலத்தில் பதவி உயர்வு பெற்று, சென்னையில் பொதுக்கல்வி இயக்ககத்தில் அலுவல் பார்த்தார்கள்.

திரு. செல்லப்பன்; தம்முடைய குடும்பச் சூழல் பற்றி, அப்படிப்பட்ட வாய்ப்பு வந்தபோது, அதை ஏற்க முடியாமல் மறுத்துவிட நேர்ந்தது.

மாணிக்கம் அலுவலக மேற்பார்வையர் பதவிவரை உயர்வு பெற்று பவுபெற்றார். பிறகு சேலம் சென்று அங்குத் தொடங்கிய தனியார் அiலுரி ஒன்றில் வேலையில் சேர்ந்தார்.

கலப்பு மணம் செய்த கஸ்துரி

பாலகிருஷ்ணன் பொதுக்கல்வி இயக்ககத்தில் பணியாற்றிவிட்டு பொருளாளர் “பர்சார் பதவி பெற்று, மேரி இராணி கல்லூரியில் பணிபுரிந்து வந்தார்.

ஒய்வு வயதிற்கு முன்பே, அலுவலகத்திலிருந்து திரும்பும்போது பெருந்தில் அடிபட்டு, அகாலத்தில் மறைந்தார்.

அவருக்குப் பிள்ளைகுட்டிகள் அதிகம். அவர்கள் அனைவரும் படித்துப் பட்டம் பெற, தமிழக அரசு உபகாரச் சம்பளம் கொடுத்து _வியது.

பாலகிருஷ்ணன் மகள்களில் ஒரு மகள், கஸ்துாரி என்ற பெண் விசுவநாதன் என்பவரைக் கலப்பு மணம் செய்துகொண்டார். நிருத்தணியில் நடந்த அத் திருமணத்திற்குத் தலைமை தாங்கி நடத்தித் கரும் பேற்றினை எனக்கு மிகுந்த பரிவுடன் நல்கினர்.

சுற்றத்தார் எதிர்ப்பைப் பெரிதாகக் கொள்ளாது கலப்பு மணத்திற்கு முப்புதல் தந்த திருமதி பாலகிருஷ்ணனை எவ்வளவு பாராட்டினாலும் கரும்.

செல்வத்தோடு வந்த பெண்களைப் பொருட்படுத்தாமல், சாதாரண குடும்பத்தில் கலப்புமணம் செய்துகொண்ட விசுவநாதன் இளைஞர் _லகிற்கு வழிகாட்டியாவார். வாழ்க அவர் குடும்பம்!

தந்தையை இழந்த பிள்ளைகளை நல்ல வண்ணம் வளர்த்து, அவர்கள் பட்டம் பெற உதவிய தாய் வாழ்க!

என் அலுவலகத்தில் ஊழியம் பார்த்த பழனியப்பன், அங்கமுத்து ஆகிய இருவர்களும் எங்களுக்குச் செய்த பணியின் சிறப்பினை மிஞ்ச பவறொன்றும் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/217&oldid=623117" இலிருந்து மீள்விக்கப்பட்டது