பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 நினைவு அலைகள்

எனவே, ஆணையர் நரசிம்மம் அறிவு உரையைக் கேளாது, ‘சி’ பிரிவு வீடு போதுமென்று அடம் பிடித்தேன். அப்படியே ஒதுக்கினார்.

இப்போது நான் குடியிருக்கும் வீடு அப்போது கட்டி முடியவில்லை.

உடனடிப் பயனுக்கு முடிந்திருந்த 81ஆம் எண்ணுள்ள வீட்டை எனக்குக் கொடுத்தார்.

1948ஆம் ஆண்டு மே திங்கள் அவ்வீட்டிற்குக் குடி புகுந்தோம். 1948 செம்படம்பரில் இன்றுள்ள வீட்டிற்குக் குடி பெயர்ந்தேன். இருபது ஆண்டுகளில் இந்த வீடு என்னுடையதாயிற்று. நரசிம்மம் என்பால் பரிவு கொண்டு, என்னைக் கட்டாயப் படுத்தாமல் இருந்திருந்தால், நாற்பதாண்டு அரசு ஊழியத்திற்குப் பின்னும் வீடு இன்றித் தவித்து இருப்பேன்.

என்னைப் பற்றியோ, என் எதிர் காலம் பற்றியோ, சிறிதும் சிந்திக்காத ‘குழந்தை'யாகவே இருந்து விட்டேன்.

48 இல் செனாய் நகர் i =

அந்தக் காலத்தில் செனாய் நகருக்குள் பேருந்துகள் வந்து போவதில்லை.

இரவு 7 மணிக்குமேல், ஆள் நடமாட்டம் குறைவு; அச்சமூட்டும் சூழல்; ஆனால் களவு குறைவு.

அமைந்தகரை வேளாளத் தெருவில் குடியிருந்த திரு. கோபால் சாமி முதலியார் அவ்வப்போது வந்து நலம் கேட்பார், ஆள் அனுப்பி உதவுவார்.

என்னுடைய சென்னை மாநகராட்சிப் பணியின் வெற்றிக்கு, ஆந்திரராகிய திரு. நரசிம்மம் பெருந்துணையாக விளங்கியது போன்று, துணை ஆணையர் திரு. என். சங்கரன் அடிக்கடி கைகொடுத்தார்.

துணை ஆணையர் சங்கரன்

திரு. சங்கரன், தமிழ் உணர்வு மிக்கவர்; தமிழர் நல்வாழ்வு வாழ்ந்தால் தான், தமிழ் உரிய மதிப்புப் பெறும் என்ற கொள்கையுடையவர்.

தனியார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வாழ்க்கையைக் தொடங்கிய திரு. என். சங்கரன், தொழிலாளர் நலத்தில் அக்கறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/286&oldid=623193" இலிருந்து மீள்விக்கப்பட்டது