பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 நினைவு அலைகள்

‘மேற்படி தொகைகள் போதாதென்றால் எவ்வளவு வேண்டுமென்று சொல்லக் கூச்சப்படாதீர்கள்.

‘இதற்கு இசைவு தந்தால், முறைப்படிக் கடிதம் எழுதுகிறேன்.’ இப்படி, முதன்முறை என்னைக் கண்ட டாக்டர் அழகப்பா கூறினார்.

‘அதுவரை நான் எந்த நூலும் எழுதியவன் அல்ல’ என்பது

‘அப்படியிருக்க என்னைத் தேடி வருவானேன்?’ என்று சிந்தித்தேன்.

விலை போக மறுத்தேன்

காரணம் பளிச்சிட்டது. அது என்ன?

என் நூல்களை வெளியிடும் சாக்கில், பதினெட்டு ஆண்டுகள்போல், மண்டல ஆய்வாளனாகவாகிலும் இயங்க வேண்டிய என்னை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள் என்று எனக்குப் பட்டது.

என் பெயரைப் பயன்படுத்தி, மாநகர் ஆட்சிப் பள்ளிகளில் என் நூல்களை வைக்க நெருக்குவார்கள்; பிற ஊர்களிலும் அத்தகைய முயற்சிகள் நடக்கும்.

பெரிய பதவிக்காரன் ஒருவனைத் தன் கையில் வைத்துக் கொள்ளும் முயற்சியாக அது பட்டது.

ஒருவருக்கு, கன்னத்தில் அறைந்தாற்போல் பதில் சொல்வது சரியல்ல.

எனவே, யோசித்துப் பதில் கூறுவதாகச் சொல்லி, மரியாதையாக அனுப்பி வைத்தேன்.

சத்தியமூர்த்தி வந்தார்

அன்று மாலை நான்கு மணிபோல், என் அலுவலக அறைக்குள் ஓங்கி உயர்ந்து இருந்த, ஒருவர் நுழைந்தார். அவரை வரவேற்று அமரச் செய்தேன்.

அவர் யார்?

திரு. சத்தியமூர்த்தி, மாநகராட்சியின் உதவிக் கணக்கு அலுவலர்.

பெரிய இடங்களில் தொடர்புகளும் செல்வாக்கும் மிக்கவர். தாம் வகித்த பதவிக்கு மேற்பட்ட உயர்ந்த செல்வாக்கைப் பெற்றிருந்தவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/320&oldid=623240" இலிருந்து மீள்விக்கப்பட்டது