பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 நினைவு அலைகள்

தள்ளமுடியாத ஆலோசனை ஒன்று பெற, அவரைத் தேடிப் போனேன். பல்கலைக்கழகக் கூட்டங்களுக்குச் செல்லவேண்டி இருப்பதால் அவரைப் பகல் உணவு வேளையின் போதே கான முடியும் என்று தெரிந்தது.

அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அங்குப் போய்ச் சேர்ந்தேன்.

உண்டு முடிந்ததும் வந்ததைப் பற்றிச் சொன்னேன். அவரது வழிகாட்டல் கிடைத்தது. விடைபெற்றுக்கொள்ள எழுந்தேன்.

‘நெ.து. சு. எப்போது பாரிஸ் செல்லப் போகிறீர்கள் என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘என்ன கேட்கிறீர்கள்?’ என்றேன். திரும்பச் சொன்னார் திகைத்துப் போனேன். என் உடையில் ஏதாவது குறிப்பிடத்தக்க மாறுதல் ஏற்பட்டு விட்டதோ என்று மேலும் கீழும் பார்த்துக்கொண்டேன். ஒன்றும் விளங்கவில்லை.

இயக்குநரே நடந்ததைக் கூறினார். என்ன நடந்தது? 1951 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் பாரிஸ் நகரை அடுத்த ‘சேவ் என்ற ஊரில், ‘யூனெஸ்கோ சார்பில் அனைத்துலகக் கருத்தர்ங்கு ஒன்று நடக்கிறது.

அது, வரலாற்றுப் பாடத்தை உலகில் நல்லெண்ணத்தை வளர்க்கும் பாடமாகக் கற்பிப்பது எப்படி? என்று ஆயும்.

மூன்று வாரங்கள் நடக்கும் அக் கருத்தரங்கிற்கு இந்தியாவில் இருந்து இருவரை அனுப்பி வையுங்கள்.

அவர்கள் திரும்பி வந்தபின், சில ஆண்டுகளுக்காகிலும் வரலாறு கற்பிக்கவோ, வரலாற்றுப் பாடத் திட்டங்களை வகுக்கவோ வாய்ப்புப் பெற்றவர்களாக இருக்கவேண்டும்.

இருவரில் ஒருவர் பேராசிரியராகவும், ஒருவர் கல்வித்துறை நிர்வாகியாகவும் இருத்தல் நல்லது.

இப்படி யூனெஸ்கோ இந்திய அரசுக்கு எழுதிற்று. இந்திய அரசு, சென்னை மாகாண அரசுக்குச் சுற்றறிக்கை அனுப்பியது.

நம் மாகாண அரசு, இயக்ககத்தைக் கேட்டு எழுதியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/334&oldid=623255" இலிருந்து மீள்விக்கப்பட்டது