பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவு அலைகள் மூன்றாம் பாகம் 1. முதலமைச்சர் காமராசருக்கு மாலை சூட்டினேன் காமராசரின் திட்டங்கள் பொழுது புலர்ந்தது. பதவி உயர்வு பெற்ற அன்றும் வழக்கம்’ போல் அய்ந்து மணிக்கே விழித்தேன். காலைக் கடன்களை முடித்தேன். அன்றாட அலுவலுக்கு ஆயத்தமானேன். செய்தித் தாள்கள் வந்தன. பல்வேறு செய்திகளோடு வந்தன. அவற்றில் ஒன்று, ாண் பதவி உயர்வு பற்றியது. - பொதுக் கல்வித்துறையின் துணை இயக்குநரான நெ. து. அதாவடிவேலு, சென்னை மாகாணத்தின் பொதுக்கல்வி இயக்குநர் மற்றும் பொது நூலக இயக்குநர் மற்றும் அரசுத் தேர்வுகளின் ஆணையராக நியமிக்கப்பட்டதாக ஒரு செய்தி கூறிற்று. பொதுக்கல்வி இயக்குநரே, தொடக்கக்கல்வி- அடிப்படைக் Mவி ட்பட நடுநிலைக்கல்வி, உயர்நிலைக்கல்வி, கல்லூரிக் கல்வி, பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றிற்குத் தலைவர். i பொது நூலகச் சட்டத்தின்படி பொதுக்கல்வி இயக்குநரே, பொது நூலகத்தை இயக்கும் கடமையாளர். வட்டாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, ஆசிரியர் பயிற்சிகள் ஆகிய மட்டங்களில் நடக்கும் அரசுத் தேர்வுகளை நடத்தும் பொறுப்பும் அதே இயக்குநருடையதாம். அன்றைய சென்னை மாகாணத்தில், தமிழ் மாவட்டங்களோடு தெ. கன்னட மாவட்டம், மலபார் மாவட்டம் ஆகிய இரண்டும். சேர்ந்திருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/41&oldid=788209" இலிருந்து மீள்விக்கப்பட்டது