பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்து நில் துணிந்து செல் 25 'தேவர் என்றால் தெய்வம் என்பது அர்த்தம் இல்லை. மனித உடலோடு உலகில் உலா வருகிற நடமாடும் தெய்வம் என்பது பொருள். அதாவது, தெய்வத்திற்குத் தருகிற காணிக்கை போல, பூஜை, படையல் என்பதாக, ஒரு மனிதர் மக்களிடமிருந்து பெறுகிற புகழ்நிலைக்குத்தான் தேவநிலை என்று பெயர். தேவநிலையை எய்துகிற மனிதர்தான், தேவர் என்று போற்றப்படுகிறார். வணங்கப்படுகிறார், பூஜிக்கப்படுகிறார். o பழங்கால கிரேக்கத்தில், ஒலிம்பிக் பந்தயங்களில் வெற்றிபெற்ற ஒரு வீரன், அவன் வாழும் நகரமக்கள், அவனுக்காக கோயில் கட்டி, அங்கே பூஜைகள் நடத்தினர். பொருட்களைப் படைத்தனர். அவன் ஒரு குட்டிதேவதை பெறுகிற அனைத்துப் பெருமைகளையும் பெற்று வாழ்ந்தான் என்பது நடந்த சரித்திரச் சான்றாகும். ஏன்? அவன் செய்த செயற்கரிய செயலால், பெறற்கரிய வெற்றியைப் பெற்றதால் தான். ஆக, ஒரு மனிதன் அறிவு நிறையப் பெற்று ஆற்றல்மிகு காரியங்களால் மக்கள் மனதிலே அமர்ந்து, மேலும் பெருமைகள் பல படைத்து, தேவராக மாறி வாழ்கிறபோது தான் பிறந்ததன் பயனை அடைகிறான். அப்படிப்பட்ட பெருமை பெறும் வழிகள் தான் என்ன? எப்படி எய்துவது என்று காண்போம்.