பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தாம் வகுப்பில் படித்தவர்கள் பெரிய பெரிய - நன்கு வளர்ந்த - பையன்களாக இருந்தார்கள். படிப்பில் காட்டியதை விட குறும்புகள் செய்வதிலும் கலாட்டா பண்ணுவதிலும் அதிகமான உற்சாகம் காட்டினார்கள். நினைத்தால் பள்ளிக்கு மட்டம் போடத் தயங்க மாட்டார்கள். ஒரு சமயம் பெரிய மாணவன் ஒருவன், பக்கத்தில் நின்ற ஒரு பையனின் புது நோட்டிலிருந்து ஒரு தாளைக் கிழித்தெடுத்தான். நான் காலரா கண்டு கஷ்டப்படுகிறேன். அதனால் வகுப்புக்கு வரமுடிய வில்லை. தயவு செய்து எனக்கு லீவு கொடுக்கவும் என்று லிவு லெட்டர் எழுதிக் கொடுத்தான். ஜாலியாக சைக்கிளில் ஏறிச்சுற்றப் போனான். இன்னொரு மாணவனுக்கு டிரில் மாஸ்டரை பிடிக்கவில்லை. பெருமாள் தாஸ் என்பர் டிரில் மாஸ்டராகப் பணியாற்றினார். உடல் பயிற்சி வகுப்பில் அவர் மாணவர்களை ஏ பர்மா பிரேதம் அடே சைனாச் சவமே ஏலே ஜப்பான் பொம்மை என்று திட்டுவார். நன்கு வளர்ந்திருந்த பெரியமானவனையும் அவர் அவ்விதமே திட்டிக் கொண்டிருந்தார். நெட்டிலிங்க மரம் மாதிரி நிற்கிறியே! சைனா பிரேதம் மாதிரி மூஞ்சியை வச்சுக்கிட்டு' என்று அவனை அவர் வசைபாடினார். ஆத்திரம் அடைந்த அந்த மாணவன் மாஸ்டர் மூஞ்சியில் ஓங்கி ஒரு குத்துவிட்டான். ஒடிப் போய், தயாராக நிறுத்தி வைத்திருந்த சைக்கிளில் ஏறி, வேகமாகப் பள்ளியைவிட்டு வெளியே போய்விட்டான். அதற்குப் பிறகு அவன் படிக்கவே வரவில்லை. - அவமானம் அடைந்த டிரில் மாஸ்டரும் வேலையிலிருந்து விலகிக் கொண்டார். சித்தப்பா வீட்டில் தங்கியிருந்த நாங்கள் சில மாதங்களிலேயே வேறு வீடு பார்த்து தனியாக வசிக்கப் போய்ச் சேர்ந்தோம் தொண்டி என்ற ஊரில் வேலை பார்ப்பது ஒத்துக் கொள்ளாததால், அப்பா நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டு திருநெல்வேலிக்கு வந்துவிட்டார். அங்குள்ள சாப்பாடு சரிப்பட்டு வரவில்லை. சீதோஷ்ண நிலையும் ஒத்துக்கொள்ள வில்லை. அதனால் அப்பாவின் உடம்பில் பெரிய கட்டி தோன்றி தொல்லை கொடுத்தது. ஏற்கனவே அப்பாவுக்கு ஆஸ்துமா நோய் இருந்தது. தீராத நோய் அது தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டு வந்தார். மூச்சு விடுவது வெகு சிரமமாக இருக்கும்போது ஹிம்ராட்ஸ் க்யூர் எனும் ஒரு பொடியை 100 கீ. வல்லிக்கண்ணன்