பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ற நாவல் முதலியன. அவை எல்லாம் இங்கிலாந்தின் பிரசுர நிறுவனம் ஒன்றினால் வெளியிடப்பட்டவை. அக்காலத்தில் பலராலும் விரும்பிப் படிக்கப்பெற்ற நூல்கள் அவை. ஆலிவர் கோல்டுஸ்மித் எழுதிய தி சிட்டிசன் ஆஃப் தி ஒர்ல்ட் என்ற பெரிய புத்தகத்தை ஒருவர் தந்தார். சீனாவிலிருந்து தத்துவஞானி ஒருவர் தனது நண்பருக்கு எழுதிய கடிதங்கள் என்று கோல்டுஸ்மித் பல்வேறு அனுபவங்கள் குறித்தும் ஆழ்ந்த முறையில், கடித வடிவத்தில் எழுதிய இலக்கிய நூல் அது சுவாரசியமான அனுபவங்கள், விந்தை மனிதர்கள் பற்றிய வேடிக்கைக் கருத்துக்கள், தத்துவ எண்ணங்கள், ஆழ்ந்த நகைச்சுவை முதலியன நிறைந்த நூல் அது மற்றும் மறைமலை அடிகள் எழுதிய நூல்களும் படிக்கக் கிடைத்தன. பக்கத்துத் தெருவில் ஒரு நண்பர் இருக்கிறார். வீட்டிலேயே பள்ளிக்கூடம் வைத்து, சிறு பிள்ளைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கிறார். ஆன்மிக விஷயங்களில் மிகுந்த ஈடுபாடு உடையவர். அவர் நிறையப் புத்தகங்கள் வைத்திருக்கிறார். உங்களோடு பழகுவதில் அவர் மகிழ்ச்சி அடைவார் என்று ஒரு நண்பர் கூறினார். என்னை அவரிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்துவைத்தார். சுந்தரம் என்ற பெயர் உடைய அவர் இரு கால்களும் விளங்காதவர். எழுந்து நிற்கவோ, நடக்கவோ இயலாது. தவழ்வது போல் ஒரு மாதிரி நகர்ந்து நகர்ந்தே இடம் விட்டு இடம் மாறிச் செல்வார். அமைதியான இனிய முகத்தோற்றம் பெற்றிருந்தார். அன்பாகப் பேசிப்பழகினார். இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தா, ரமண மகரிஷி பற்றி எல்லாம் பேசினார். இராமகிருஷ்ண விஜயம் எனும் மாத இதழின் சந்தாதார். சுந்தரம் அவரிடமிருந்த நூல்கள், இராமகிருஷ்ணவிஜயம்' தொகுப்புகள், புதிய இதழ்கள் ஆகியவற்றை எனக்கு படிக்கத் தந்தார். தினந்தோறும் இரவு 7 மணி முதல் 8 அல்லது எட்டரை மணி வரை நான் அவருடன் பேசியும், புத்தகம் படித்தும் பொழுது போக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். டைப் இன்ஸ்டீடியூட்டில் தங்கியிருந்த பள்ளி ஆசிரியர்களில் ஒருவர் மதுரைக்குப் போய்விட்டார். புதிதாக ராம குப்தா என்ற ஒரு நண்பர் வந்து சேர்ந்தார். மலையாளி. பப்ளிக் ஒர்க்ஸ் டிப்பார்ட் மெண்டில் வேலை பார்த்தார். ராமகிருஷ்ண பரமஹம்சர், நிலைபெற்ற நினைவுகள் 38 193