பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

参毯 8 路 திருநெல்வேலி போய், அங்கேயே தங்கியிருந்து, பள்ளிக் கூடத்தில் சேர்ந்து படிப்பைத் தொடர்வதற்கு சிறிது காலதாமதம் ஆயிற்று. அதுவரை ராஜவல்லிபுரத்திலேயே கம்மா இருக்க நேர்ந்தது. அங்கும் ஒரு சாவு நிகழ்வு ஏற்பட்டது. அம்மா வழியில் உறவினரான ஒருவரின் தாய் இறந்துவிட்டாள். எனக்கும் அண்ணனுக்கும் ஆச்சி பாட்டி முறை வேண்டும் அவள் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும்போது, அவளுக்கு பேரன் பேத்தி உறவுள்ளவர்கள் நெய்ப்பந்தம் பிடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். எங்களையும் சேர்த்து ஒரு பத்துப் பிள்ளைகள் கையில் சிறுசிறு துணிப்பந்தங்கள், நெய்யில் முக்கி எடுக்கப் பட்டவை, தந்தார்கள். அவற்றில் தீ வைத்து, உயர்த்திப் பிடிக்கும்படி ஏற்பாடு செய்தார்கள். இறந்து உடலிலிருந்து பிரிந்து சென்ற உயிர் வழி தெரியாமல் இருட்டிலே திண்டாடும் என்றும் அந்த ஆத்மாவுக்கு மோட்சத்துக்குப் போகும் வழியில் வெளிச்சம் படர்வதற்காக பேரன் பேத்திகள் தெய்ப்பந்தம் பிடிக்க வேண்டும் என்றும் பெரியவர்கள் விளக்கம் அளித்தார்கள். தீ பற்றி எரிந்த சிறுசிறு பந்தங்களை உயர்த்திப் பிடித்தபடி நிற்பது சிறுபிள்ளைகளுக்கு நல்ல விளையாட்டாகத் தான் தோன்றியது. - சிறிது நாள்களில் ஒரு கல்யாணமும் நிகழ்ந்தது. எங்கள் இரண்டாவது பெரியப்பாவின் இரண்டாவது மகளுக்கு உள்ளூரிலேயே கிழக்குத் தெருவின் தென்கோடியில் இருந்த அத்தை மகனுக்கு அவளை மனம் முடித்துக் கொடுத்தார்கள். அப்படி உள்ளூரிலேயே சம்பந்தம் செய்து கொள்வது சகஜ நிகழ்வாகவே நடந்து வந்தது. தலைமுறை தோறும் கல்யாணம் சிறப்பாக நடந்தது. இரவு ஊர்வலத்துக்காக திருநெல் வேலியிலிருந்து ஆயான் தகத்து வரவழைக்கப் பட்டிருந்தது. தகத்து என்பது அழகான சிறு ரதம் தற்காலத்தில் சில கோயில் களில் பிரபலமாக இருக்கிற வெள்ளித் தேர், தங்கத்தேர் போன்று அழகிய சின்ன வடிவம் கொண்டது. முழுவதும் பளபளக்கும் கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப் பட்டிருக்கும் பாதரசம் பூசப்பட்ட 9. அகி வல்லிக்கண்ணன்