பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 & நிலைபெற்ற நினைவுகள் அறிஞர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியான அனுபவமாகவே இருந்தது. சென்னையிலிருந்து காரைக்குடி சென்று தொழில் புரிந்த சக்தி காரியாலயம் மீண்டும் சென்னைக்கு பத்திருந்தது. இதன் அலுவலகம் பவளக்காரத் தெருவில் இருந்தது. சக்தி' பத்திரிகையின் ஆசிரியரான தி.ஜரவைக் காண்பதற்காக நாங்கள் அங்கேயே போனோம். அச்சமயம் மஞ்சேரி எஸ்.ஈஸ்வரனும் அங்கு இருந்தார். அவரிடமும் மலருக்குக் கதை கேட்டார் திருலோகம். அவருடைய வீட்டு விலாசத்தைக் கேட்டுக் குறித்துக் கொண்டார். அன்று இரவே மஞ்சேரி ஈஸ்வரனைப் பார்க்கப் போவோம் என்று திருலோகம் என்னையும் அழைத்துச் சென்றார். அவர் வீடு எழும்பூரில், பஞ்சவடி என்ற பகுதியில் இருந்தது. இருட்டில் சிரமப்பட்டுத் தெருவைக் கண்டுபிடித்து ஈஸ்வரன் வீட்டையும் கண்டுபிடித்தோம். அவர் வீட்டில் இருந்தார். அந்த நேரத்தில் எங்கள் இருவரையும் அவர் எதிர்பார்க்கவில்லை. ஆச்சர்யம் அடைந்தார். ஏது இவ்வளவு தூரம் என்று கேட்டார். கிராம ஊழியன் மலருக்குக் கதை கேட்கலாம் என்றுதான் வந்தோம் என்று திருலோகம் சொன்னார். அது தான் சக்தி காரியாலயத்தில் இருந்த போதே கேட்டீர்களே. நானும் எழுதித் தருவதாகச் சொன்னேனே என்றார் ஈஸ்வரன். 'ஏதோ பார்த்த இடத்தில் கேட்டதை மரியாதைக் குறைவாக எண்ணிவிடக் கூடாது. அதற்காகத்தான் வீட்டிற்கே வந்து உங்களிடம் கதை கேட்க வேண்டும் என்று வந்தோம். ஈஸ்வரன் உளநெகிழ்ச்சி அடைந்தார். அப்படி எல்லாம் நான் நினைக்க மாட்டேன்’ என்றார். மஞ்சேரி ஈஸ்வரன் பெரிய எழுத்தாளர். ஆங்கிலத்தில் கதைகள் எழுதிப் பெயர் பெற்றிருந்தார். தமிழிலும் அவரது கதைகள் வெளிவந்தன. சக்தி'யில் அவருடைய கதைகள் அடிக்கடி பிரசுரம் பெற்றன. அவற்றை எல்லாம் தி.ஜ.ர. தமிழாக்கியதாக அவரே சொன்னார். மஞ்சேரி ஈஸ்வரன் கதைகள் 1930களில் தினமணி மலர்களிலும் வெளியாகியிருந்தன. மறக்க முடியாத கதைகள் அவை, அவற்றை நான் குறிப்பிட்டுச் சொன்னேன். அவர் வியப்பும் மகிழ்ச்சியும் தெரிவித்தார். எப்பவோ வந்த கதைகளைப் படித்து, நன்றாக