பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஆ 129 ஒருவன் காண்’ என்று எழுத்தாளன் அறிவிப்பு செய்யும் கவிதை குத்தலும் நையாண்டியும் சாடலும் நிறைந்தது. முடிவில் அது விடுத்த கோரிக்கை இத்தனைக்கும் மேலே இன்னொன்று! நான் செத்ததற்குப் பின்னால் நிதிகள் திரட்டாதீர்! நினைவை விளிம்பு கட்டி சிலைகள் செய்யாதீர்! இந்தக் கவிதைக்கும், திருலோகம் அதைப் பாடிய தோரணைக்கும் பிரமாத வரவேற்பு கிட்டியது. இது யார் பாடியது என்று வரா கேட்டார். வேளுர் வெ. கந்தசாமிக் கவிராயர் என்று திருலோகம் மிடுக்காகச் சொன்னார். வரா. திகைப்பு அடைந்தார். யார் அது? யார் அது? என்று திரும்பத் திரும்பக் கேட்டார். அதன் பிறகு தான், புதுமைப்பித்தன் எழுதிய கவிதை இது. இன்னும் அச்சில் வரவில்லை எனத் திருலோகம் தெரிவித்தார். கிராம ஊழியன் ஆண்டு மலர் உரிய காலத்தில் வெளி வந்தது. அது தரமான இலக்கிய மலராக அமைந்து இலக்கியவாதிகளின் பாராட்டுக்களை அதிகம் பெற்றது. மகாகவி பாரதியாரை அடுத்து வந்து, புகழ் பெற்றிருந்த கவிஞர்கள் அனைவரது கவிதைகளும் அம்மலரில் இடம் பெற்றிருந்தன. பாரதிதாசன், சது.க.யோகியார், தேசிகவிநாயகம் பிள்ளை, நாமக்கல் வெ.ராமலிங்கம், கவியோகி சுத்தானந்த பாரதியார், கம்பதாசன் ஆகியோரின் படைப்புகள். அடுத்த தலைமுறைக் கவிஞர்களான கலைவாணன், சாலிவாகனன், மந்தஹாசன், தேப.பெருமாள், சுரபி ஆகியோரும் கவிதை விருந்து அளித்திருந்தனர். ந.பிச்சமூர்த்தி (பிr) மகாகவிகள் என்று ஐந்து பறவைகள் பற்றி தனித்தன்மையான கவிதை இயற்றியிருந்தார். சிறுகதைகள், கட்டுரைகளிலும் அந்த மலர் சிறந்து விளங்கியது. அனைத்தினும் மேலாக விசேஷமாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு சிறப்புத் தன்மையை கிராம ஊழியன் ஆண்டு மலர் பெற்றிருந்தது. தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் அக்காலத்தில் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களுக்குக் கவனிப்பும், அவர்களுடைய எழுத்துக்கு வரவேற்பும் கொடுத்ததில்லை. 'கலைமகள் அபூர்வமாக சம்பந்தன், சி. வைத்தியலிங்கம்