பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நிலைபெற்ற நினைவுகள் விழிப்பு வந்தபோது இன்னும் விடிந்திருக்கவில்லை. வைகறை வெளிச்சம் பரவி சூழ்நிலையை தெளிவு படுத்திக் கொண்டிருந்தது. பயணத்தைத் தொடரவேண்டியது தான் என்று எழுந்து நடந்தேன். ரோடு ஒரத்தில் ஒரு குளமோ, குட்டையோ, தண்ணீர் பரவலாகப் பெருகிக்கிடந்தது. மழை பெய்திருந்ததால் நீர் மிகுதியாகவே தேங்கியிருந்தது. செம்மண் கலந்த நீர். காலைக் கடன்களை முடிப்பதற்கு வசதியாக இருந்தது அந்த இடம், பல் துலக்கினேன். சிறிது அவலை மென்று தின்று, தண்ணிர் குடித்தேன். நடக்கலானேன். வெறிச்சோடிய ரஸ்தா, அபூர்வமாக எப்போதாவது ஒரு பஸ் அல்லது கார் வரும். ஏதேனும் ஊர் நெருங்கும்போது ஒன்றிரு ஆட்கள் தென்படுவார்கள். தலைமீது ஏதாவது கூடை அல்லது மூட்டை சுமந்தபடி நடப்பார்கள். விற்பனை செய்வதற்காகப் பொருள்கள் கொண்டு செல்பவர்களாக இருக்கலாம். ஊர்களும் ஆள் அரவமற்று அமைதியாகவே காட்சி தந்தன. அப்படி எவரேனும் தென்பட்டால் கூட நீ யார்? எங்கிருந்து வாறே? எங்கே? போறே? என்று யாரும் என்னைக் கேட்டதில்லை. நான் மெதுநடையில் முன்னேறிக் கொண்டிருந்தேன். விருதுநகரை எட்டிவிட்டேன். ஊருக்கு முன்னாடி, ரஸ்தா ஒரத்தில் ஒரு தோட்டமும், அதில் ஒரு மடம் அல்லது சத்திரம் போன்ற சிறு கட்டிடமும் தென்பட்டன. மாலை நேரம். வெளிச்சம் அதிகமிருந்தது. சுற்றுப்புறம் எங்கும் ஆள் நடமாட்டமே இல்லை. இந்த மடத்தின் திண்ணையில் சிறிது நேரம் ஒய்வெடுக்கலாமே என்ற எண்ணம் எழுந்தது. அந்த உயர்ந்த திண்ணையில் ஏறிப் படுத்தேன். உடனேயே துரங்கிவிட்டேன். - - சட்டென விழிப்பு வந்தது. நல்ல இருட்டு. இரவில் நேரம் என்ன இருக்கும் என்று தெரியவில்லை. இருப்பினும் எழுந்து நடந்தேன். சிறிது தொலைவில் காந்த விளக்குகளின் ('கியாஸ் லைட்') வெளிச்சம் நகர்ந்து வந்து கொண்டிருந்தது. ஏழெட்டுப் பேர்கள் மெளனமாய் கும்பலாக வந்தார்கள். அவர்களில் சிலர் எதையோ தூக்கி வருவது தெரிந்தது. அந்தக் கூட்டம் நெருங்கி வரவர, விஷயம் புலப்பட்டது அது பின ஊர்வலம். சுடுகாடு அருகில் எங்கோ இருக்க வேண்டும் இறந்தவரின் உடலை எரிப்பதற்காக அந்த நேரத்தில் அவர்கள் போய்க் கொண்டிந்தார்கள்.