பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

مم--س۔-ج* அரசியல் நிகழ்வுகள், அரசியல் கட்சிகள், அவற்றின் செயல்பாடுகளில் எல்லாம் நான் ஆர்வமோ அக்கறையோ கொண்டதில்லை. ஆயினும் முக்கிய நிகழ்ச்சிகள் அவ்வப்போது என் கவனத்தில் பட்டுக்கொண்டிருந்தன என்று சொல்லவேண்டும். இரண்டாவது உலகமகாயுத்தம் வளர்ந்து கொண்டிருந்தது சர்வாதிகாரி ஹிட்லர் பேராசையோடு போரிட்டு நாடுகளை ஒவ்வொன்றாக வென்று கொண்டிருந்தான். இத்தாலிய சர்வாதிகாரியான பெனிட்டோ முசோலினி ஹிட்லருக்கு துணையாகச் செயல்பட்டு வந்தான். அவர்களுடைய தாக்குதலை சமாளிக்க முடியாமல் பிரிட்டன் திணறிக் கொண்டிருந்தது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியினர் யுத்தநிதி வசூலிப்பதில் கெடுபிடியாக இருந்தனர். விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியினர் யுத்தத்துக்காக வெள்ளையருக்கு நிதி கொடுக்கக்கூடாது என்று பிரசாரம் செய்தனர். யுத்தத்தை ஆதரித்து, யுத்த நிதி வழங்கும்படி பிரசாரம் செய்யும் நாடகங்கள் அங்கங்கே அரசு உதவியுடன் நடத்தப்பட்டன. யுத்தத்துக்காகப் பிரசாரம் செய்யும் சினிமாப் படங்களையும் சினிமாத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களில் சிலர் தயாரித்தனர். சேலம் மாடர்ன் தியேட்டர்சார், இந்த வகையில், பர்மாராணி என்றொரு படம் தயாரித்து வெளியிட்டார்கள். ஜெர்மா ஐரோப்பாவில் யுத்தம் நடந்து கொண்டிருந்தபோதே, ஆசியாவில் ஜப்பானும் போர் துவக்கியது. வெற்றிகரமாக அண்டை நாடுகளை ஆக்கிரமித்தது. இந்தியாவில் ஜப்பானியருக்கு எதிரான துவேஷப் பிரசாரங்கள் ஜப்பானியரை வெறுக்கத் துண்டும் கோஷங்கள் - தீவிரமாகப் பரப்பப்பட்டு வந்தன.