பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நிலையும் நினைப்பும் திற்குப் பிறகு செல்வம் குறைந்திருக்கிறது, நல் லெண்ணங்கள் மறைந்து நச்சுக் கொள்கைகள் குடி கொண்டிருக்கின்றன என்பதுவும் வரலாற்று. உண்மைகள். இதை யாரும் ஒப்புக்கொள்கிறார் கள்; மறுப்பதில்லை. எனவே ஆரியர்களது வேத இதிகாச கருத்துக்கள், அகநானூறு புறநானூறு கருத்துக்களை மறைத்து பிரகாசிக்கத் தொடங்கிய வுடன் தமிழர்களின் நினைப்பு கெட்டு, நினைப்புக் கெடவே, நிலையும் கெட்டிருக்கவேண்டும் என்பது என் யூகம். வரலாற்று ஆசிரியர்கள் அது பற்றி ஆராய்ச்சி செய்யட்டும். ஏதோ தரித்திரராகிவிட்டோம்; நமது நிலையும் நினைப்பும் தாழ்ந்திருக்கிறது. இனியாவது தரித்திர ராகமல் இருக்க, நமது நிலையும் நினைப்பும் தாழ்ந்து போகாமல் இருக்க, ஒரு வழி வகுக்கவேண்டும் என்பதே என் அவா. பழங்கால தமிழகத்தைப் பற்றி, அதன் சிறப்பைப்பற்றி, அதில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி, காதலைப் பற்றி, பண்பைப் பற்றி இன்று நாட்டின் பெரும் பகுதியினரான பாமர மக்களுக்குத் தெரி யாது. பல்கலைக் கழகத்தில் படிக்கும் ஒரு சிலருக் குத்தான் தெரியும். தெரிந்த நம் நெஞ்சில் மீண் டும் தாழ்ந்த தமிழகத்தை உயர்த்தவேண்டும் என் றும், இன்று மக்கள் மனதில் படிந்திருக்கும் மூட நம்பிக்கைகளைத், தமிழ்ப் பண்பாட்டிற்கு மாறான கருத்துக்களை அகற்றி ஆங்கே பண்டைய உயர்ந்த கருத்துக்களைக் குடியேற்ற வேண்டும் என்றும் நினைப்புகள் தோன்றியிருக்கின்றன. இந்த நினைப்பு