பக்கம்:நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 சி.என்.அண்ணாத்துரை ணாஸ்திரம்,வாயுவாஸ்திரம், மோகனாஸ்திரம், அக்கினி யாஸ்திரம் ஆகிய அஸ்திரங்களில் எந்த அஸ்திரமாவது எதிரியை வீழ்த்தியபோது உதவியதாக எங்காவது பாடல் இருப்பதாகச் சொல்லமுடியுமா? பின் எப்படிப் போர் நடந்திருக்கும்? தமிழ் மன்னர்கள் வெற்றி ெ றிருப்பர்; போர் என்றதும் வீரர்கள் கூடியிருப்பா பட்டாளம் அணிவகுக்கப்பட்டிருக்கும்; போர் முரசு கொட்டியிருப்பர்; வஞ்சிகள் சூடியிருப்பர்; பாணிங் கள் தொடுத்திருப்பர்; தூதுவர் சென்றிருப்பர்; கொடி இறக்கப்பட்டிருக்கும்; அகழிகளை வெட்டியிருர் கள்: வாய்க்கால்களைத் தாண்டியிருப்பார்கள்: களை நீந்திருப்பார்கள் : ஆரண்யங்களைக் கடந்திருப் பார்கள்: அவர்கள் தோள் வீங்கியிருக்கும்; கண்கள் சிவந்திருக்கும்; வேல் எறிந்திருப்பர்; அது எதிரியின் விலாவில் பாய்ந்திருக்கும்; வெற்றி கிடைத்திருக்கும். பரணி பாடியிருப்பர்! இப்படித்தான் தமிழகத்தில் போர் நடந்ததாகப் பழம் பெரும் காப்பியங்களில் காணமுடியுமேதவிர வேறுவிதமாகக் காண முடியாது. தமிழ் மன்னன் போர் என்று அறிவித்ததும். போர்ப் பிரதானியர் புடைசூழா முன் குரு வந்தார்; கொலு மண்டபத்திலுள்ள மந்திரிகள், மக்கள் அனை வரும் எழுந்து நின்றனர். மன்னன் சிம்மாசனத்தி லிருந்து இறங்கி ஓடிவந்து குருவை வரவேற்று ஓர் ஆசனத்தில் அமரவைத்தான். குரு அனைவரையும் ஆசீர்வதித்தார். பிறகு குரு பேசுகிறார். குரு :- ராஜன்! போருக்குக் கிளம்புவதாகக் கேள்விப்பட்டேன்!